திருவிழாக்களின் தத்துவங்கள் :
* காரணாகமம் , காமிகாகமம் , வாதுளாகமம் திருவிழாக்கள் பலவிதம்
என கூறுகின்றது
* திருவிழா ஆரம்பிப்பதற்கு முந்தையநாள் மண்ணை பத்தம்பண்ணி
வித்திடுவது சிருஷ்டியை குறிக்கிறது
* ஐந்தொழிலை குறிக்கிறது
கொடியேற்ற தத்துவம் :
1. சமம் , விகாரம் , சந்தோசம் , சாது சங்கமம் இடபவாகனத்தின் நான்கு கால்கள் வெள்ளைநிற தரும தேவதையை குறிக்கிறது . இதனை ஒப்ப ஆன்மா இந்நான்கு குணங்களையும் உடையவர்களானால் அவர்கலை இறைவன் இருக்கும் நிலையிலிருந்து தூக்கிவிடுவார் .
2. திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்திற்கு காரணம் அங்கு வரும் அடியவர்களை உயர்பதவி அடைய செய்வதற்காக ஆகும்
விருக்ஷ வாகன தத்துவம் :
* இதை விருத்தி கிரமசிருஷ்டி கோலம் என்பர்
* மரத்தின் இலைகள் கிளைகள் போல இறைவன் தத்துவமாகவும்
ஜீவராசிகளாகவும் உள்ளான் .
* மரத்தின் வேரில் பீடமிட்டு அம்மையப்பராக சிருஷ்டிக்கெல்லாம்
வேறாக இருப்பது அருள் என்ற சக்தியாடு கூடிய அறிவு என்ற சிவமே
ஆகும்
* விருட்சம் என்ற சொல் பிரபஞ்சத்தையும் அதன் வழிபாடும் பொருள்
உலகையும் குறிக்கும்
* வேர் மூலமாகிய பிரணவத்தை குறிக்கும்
சூரிய பிறப்பை சந்திர பிரபையில் இறைவன் எழுந்தருளிவது :
* " விருத்தி கிரம சிருஷ்டி கோலம் " என அழைக்கப்படுகிறது
* சூரியன் - வெயில் மழை , மற்றும் அனைத்து தொழில்களுக்கும்
ஆதாரம்
* இன்பத்தை தருபவன் ஆகையால் இவற்றில் இறைவனை வைத்து
வணங்குவது இஸ்திதி தொழிலுக்கு அறிகுறியாகும் .
நந்தி வாகனம் , பூதவாகனம் :
* விஞானக்கலர் ஆன்மாவிற்க்குள் சிறந்தவன் நந்தி
* இறந்த உடன் ஆன்மாக்களை கொண்டுசெல்லும் தொழில்
செய்பவன் பூதவாகனங்கள்
* இவ்விரு வாகனங்களில் மீது இறைவன் ஏறி வருவது சங்கரத்தை
குறிக்கிறது
நாகபாம்பு வாகனம் :
* மறைத்தல் தொழிலாகிய " திரோபவம் " என்பதன் அறிகுறியாகும்
ரிஷபவாகன காட்சியின் தத்துவம்:
* சிவனடியார்களுக்கு இறைவன் கட்சி வழங்குவது . ஆகையால் இது
" அனுகிரக " என சொல்லப்படுகிறது
யானைமீது வரும் காட்சி :
* சிருஷ்டியை குறிக்கிறது
கைலாச பர்சவநாதரின் தத்துவம் :
* இராவணன் ஆணவமலம் நிறைந்த உயிர் , இமயமலையை தூக்க
முயற்சி செய்து தோலிவியடைகிறார் . அதேபோன்று ஆணவமலம்
நிறைந்த உயிர்கள் இறுதியில் ஆணவத்தை இழந்து கடவுளை
தியானித்து வரம் பெற்று இறைவன் திருவடியை சென்றடைந்து
நடராஜர் உற்சவத்தில் அடங்கிய தத்துவம் :
சிருஷ்டி = உடுக்கை
ஸ்திதி = அபயகரம்
சங்காரம் = ஏரிதாகிய கைகள்
திரோபவம் = ஊன்றிய கால்கள்
அனுகிரகம் = தூக்கிய கால்
தேரின் தத்துவம் :
* தேரின் அண்ட பிண்டத்திற்கு சமமானது
* விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும்
* பத்து சக்கரங்களும் தசவாயுக்களை குறிக்கிறது
திருவிழா :
* ஆலயங்களில் 10 அல்லது 12 நாள்கள் பூஜை நடத்தி ,
மும்மூர்த்திகளை வாகனங்களில் வீதிஉலா வருவது ஆகும்
* மஹாஉற்சவம் பிரமோற்சவம் என அழைக்கப்படுகிறது .
பிரம்மோற்சவம் :
* பிரம்மனால் நடத்தப்படுகின்ற உற்சவம் என
அழைக்கப்படுகிறது
* பிருகு முனிவர் தன்னை மதிக்காது படுத்திருந்த திருமாலின்
மார்பில் எட்டி தன் கால்களால் உதைக்கிறார் . மார்பில்
குடியிருந்த லட்சுமிதேவி கோபம்கொண்டு
வெளியேறுகிறார் . வருத்தம் கொண்ட திருமால்
வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து
வேங்கடமலையில் தங்குகிறார் அங்குவந்த பிரம்மன் பெரிய
விழா எடுத்தார் . என்றும் கூறுவர்
* பெரிய கோவில்களில் மட்டுமே பிரம்மோற்சவ நடைபெறும்
* பிரம்மனால் நடத்தப்படுவதாலும் , பெரிய உட்சவம்
என்பதாலும் இப்பெயர் பெற்றது
* 7நாள் திருவிழாவாக திருமலையில் நடைபெறுகிறது
விநாயகர் சதுர்த்தி :
* ஆண்டுதோறும் ஆவணி வளர்பிறை சதுர்த்தி அன்று
கொண்டாடப்படுகிறது
* அன்று விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படுகிறது
* சத்தரப்பதி சிவாஜி காலத்திலிருந்தே தேசிய விழாவாக
கொண்டாடப்பட்டு வருகிறது
* இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஒருவரான
பாலகங்காதர திலகர் அவர்களால் ஆண்டுதோறும்
வணங்கும் முறை நடைமுறைக்கு வந்தது
* அம்மாவாசை முடிந்த நான்காம் நாள் கஜமுகாசுரன் வாதம்
நடைபெற்றது ( அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பர்
நவராத்திரி :
* 9 நாள் இரவு என குறிக்கிறது
* புரட்டாசி அம்மாவாசை தொடந்து அடுத்த 9 நாட்கள் கொலு பூஜை
நடைபெறும் 10வது நாள் விஜயதசமி ( துர்க்கை )
கொண்டாடப்படுகிறது
* அன்றே மகிஷாசுர வதம் செய்கிறாள் துர்க்காதேவி
* மைசூரில் இது தசரவாக அழைக்கப்படுகிறது
* பழைய பெயர் : தசஹரா ( 10 தலையை கொய்தல்
முதல் மூன்று நாள் - மலைமகளுக்கு ( பார்வதி )
அடுத்த மூன்றுநாள் - திரு மகளுக்கு ( லட்சுமி )
கடைசி மூன்றுநாள் - கலைமகளை
10வது நாள் விஜயதசமி
வைகுண்ட ஏகதேச :
* மார்கழி மாதம் ஸுக்லபட்ச ஏகாதசி அன்று
கொண்டாடப்படுகிறது
* திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட
ஏகாதேசியாக வணங்கும் முறையை முதலில் கொண்டுவந்தார்
* ஏகாதசி = " 11 தினம் " என பொருள்படும்
ஞானேந்திரியங்கள் - 5
கன்மேந்திரியங்கள் - 5
மனது - 1
-------------
11
( பகல் பத்து இராப்பத்து )
ஆகிய 11 நாளும் பெருமாளிடம் ஐக்கியம் ஆகி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம் ஆகும்
கன்மேந்திரியங்கள் - வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம்
ஆருத்திரா தரிசனம் :
* மார்கழி மாதம் திருவாதிரை நாளில் கொண்டாடப்படுகிறது
* தில்லை நடராஜப்பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம்
வரும் கட்சியே ஆருத்ரா தரிசனம் என்பர்
* ஆருத்ரா = " ஆதிரை "
* ஐதீக கதை :
கர்மாவே பெரிது ,கடவுள் இல்லை என கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை ஆடையாக்கி உடுக்கை தீ கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசனம் காட்டி தந்த நன்னாள்தான் மார்கழி திருவாதிரை
* வியாக்ர பாதர் முனிவருக்கு நடன தரிசனம் தந்தார்
* களிநிவேதனம் ( களி == ஆனந்தம் )
* இவரது ஐந்தொழிலை உணர்த்துவதாக அமையும் பொருட்டே
கோவில்களில் பஞ்சகிருத்திய உற்சவம் நடக்கிறது ( ஆ = தரிசனம் )
பூஜைகள் / கிரியைகள் :
* " ஞானத்தை உண்டாக்கக்கூடிய சாதனம் " என குறிக்கிறது
பூ = பூர்த்தி , நிறைவு
ஜா = தோன்றுதல்
" வினைகளை பூர்த்தியாகி ஞானம் தோன்றுதல் "
இரண்டுவகை பூஜைகள் :
1. ஆத்மார்த்த பூஜை
2. பரார்த்த பூஜை
1. ஆத்மார்த்த பூஜை
* தீக்க்ஷ பெற்று குரு உபதேத்தபடி தனது நன்மையை கருதி
வீட்டில் செய்யப்படும் பூஜை ஆத்மார்த்தபூஜை எனப்படும்
2. பரார்த்த பூஜை :
* உலகத்தோர் உய்ய , இறைவனை வணங்கி கடைத்தேற
தேவர்கள் ரிஷிகள் அரசர்களால் இஸ்ஹாபிக்கப்பட்ட
ஆலயங்களில் பூஜித்து வருவது பரார்த்த பூஜை எனப்படும்
பூஜை செய்வதற்கு மும் பஞ்ச சுத்தி செய்யவேண்டும் :
1. ஆன்ம சுத்தி
2. ஸ்தாபன சுத்தி
3. திரவிய சுத்தி
4. மந்திர சுத்தி
5. லிங்க சுத்தி
இவை செய்வதற்கு காரணம் ஆணவம் கன்மம் மாயை மாயேயி , திரோதாயி ஆகியவைகளை கழிவதற்கு
சோடசம்மஹனம் : (16 செயல்கள் )
1. தியானம் - இறைவனை தியானியத்தல்
2. ஆவாகனம் - அமரச்செய்தல்
3. அர்க்யம் - கைகழுவ நீர்கொடுத்தல்
4. ஆசமநீயம் - பருகுவதற்கு நீர்கொடுத்தல்
5. பாத்தியம் - பாதம் கழுவுதல்
6. அபிஷேகம் - நீராட்டுதல்
7. வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
8. சாஸ்திரம் - பூணுல் இடுதல்
9. ஆபரணம் - நகைகள் அணுவித்தல்
10. கந்தம் - சந்தானம் குங்குமம் இடுதல்
11. தூபம் - ஊதுபத்தி , சாம்பிராணி , அகழ் காட்டுதல்
12. நைவேத்தியம்
13. நீராஜனம்
14. தாம்பூலம்
=================================================
ஐந்தொழில்களை :
சிருஷ்டி => படைத்தல்
ஸ்துதி => காத்தல்
சம்ஹாரம் => அழித்தல்
த்ரோபாவம் => மறைத்தல்
அனுக்கிரஹம் => அருளல்
-------------------------------------------------
சிவத்துவங்கள் 90 :
சிவத்துவங்கள் - 36
தத்துவிகம் - 60
------------
90
--------------
ஞானேந்திரியம் / அரிக்கருவி - 5
கன்மேந்திரியம் / தொழில்கருவி - 5
தன்மாத்திரை - 5
பஞ்சப்பூதங்கள் - 5
அந்தக்கரணம் - 4
------------
ஆன்மதத்துவம் = 24
----------------
ஆன்மதத்துவம் - 24
வித்யாதத்துவம் - 7
சிவதத்துவம் - 5
--------------
= 36
தாதுவிக்கம் = 60
---------------
= 96
-------------
=======================================================
புராணம் = " பழைய கதை "
ஆகமம் = " ஒன்றிலிருந்து வந்தது "
மீமாம்சை = ஆராய்ச்சி
தத்துவமும் = உண்மை
சுருதி = நேரே தெரிவிக்கப்பட்டவை
வேதம் = அறிவு
பிராமணங்கள் = வேதமந்திரங்கள் விளக்கம்
ரீடா ( Rta ) = மீறக்கூடாதவை
அறஒழுக்கம்
cosmic order / moral order
நிரயம் = நரகம்
உபநிடதம் = ஈடுபாட்டோடு நெருங்கி அமர்ந்து கற்றுக்கொள்ள
ஸ்மிருதி = தூயமரபுக்கள்
ராமாயணம் கூறும் திரிவர்க்கங்கள் :
தர்மம் = ஆன்ம நலன்
அர்த்தம் = பருப்பொருள் நலன்
காமம் = விருப்பத்தின் நிறைவு
------------------------------------------------------
சிவாகமங்கள் - 28
சிவ உபாகமங்கள் - 113
சாக்தேய ஆகமங்கள் - 64
பஞ்சராத்காரம் - 108
-------------------------------------------
Where to get from MGM Grand casino? | DRMCDC
ReplyDeleteThe MGM Grand Casino in Las Vegas is one of the 제주 출장안마 largest, most impressive and most luxurious luxury hotel casino in 전라남도 출장샵 the 군포 출장안마 United 논산 출장샵 States. Located 익산 출장마사지 on the