புத்தம் , சமணம் , சேருவகம் , நியாயம் , வைசேஷிகம் , சாங்கியம் , யோகம் , மீமாம்சைகளை
சாருவகம் : / உலகாயதம் :
* கடவுள் உண்டு என்பதை நம்பாதவர்கள்
* இந்த உலகம் மாயை இல்லை என்கின்றனர்
* கடவுளை காணமுடியாது ஆகையால் கடவுள் இல்லை என்கின்றனர்
* முறுபிறப்பு என்பது பொய்
* உலகம் மட்டுமே உள்ளது
* பெண்களை மகிழ்விப்பதே சிறந்த தவம்
* அழகிய பெண்களை மணந்து இன்புறுவதே முக்தி என்பர்
உலகம் ( மட்கலம் ) :
* உலகை படைக்க இறைவன் தேவையில்லை , படைத்த ஒரு சுபவம் . தானே
நிகழக்கூடியது
நான்கு பூதங்கள் :
* நிலம் நீர் காற்று நெருப்பு மட்டுமே உள்ளது ஆகாயம் என்ற ஒன்று இல்லை .
கண்களுக்கு ஆகாயம் புலப்படவில்லை ஆகையால் ஆகாயம் இல்லை என்பர் .
மூன்று பிராமணங்கள் :
1. பிரத்தியட்ச பிரமாணம் - ஐம்பொறி மூலம் காண்பது
2. அனுமானம் - இருப்பதாக கருதுதல்
3. ஆபித்தவாக்கியம் - கண்டவர்கள் சொல்வதை கேட்பது ( வேதவாக்கு )
இதில் பிரத்தியட்சம் மட்டுமே நம்புகின்றனர்
முற்பிறப்பு கர்மவினை :
* " மலடி பெற்ற பிள்ளை முயல்கொம்பின்மீது ஏறி ஆகாயத்தில் உள்ள பூவை
பரித்தாளாம் ." என்பர் .
* முற்பிறப்பு கர்மவினைகள் மீது நம்பிக்கை இல்லை .
சுபாபவாதம் :
* விலங்குகள் , மனிதர்கள் , குயில்கள் , கூவல் , மயில்கள் அகவல் , புலவர்களின்
விரட்டல் இவையெல்லாம் அவையவையின் சுபாவம் என்பர்
-------------------------------------------------------------------------------------------------------------------------
புத்த மதம் :
கி.மு . 6ம் நூற்றாண்டு
* பௌராணிகர்கள் , விஷ்ணுவின் அவதாரமே புத்தர் என்பர்
* புத்தர் பிறப்பால் ஒரு இந்து
* கண்டதும் கருதுவதும் உண்மை , ஆபித்தவாக்கியத்தை ஏற்பதில்லை
* கர்மாவை புத்தர் ஏற்கவில்லை
* மாறும்பொருள் என்று ஏதுமில்லை . மாற்றம் மட்டுமே நிரந்தரமானது .
" மாற்றம் தான் மெய் . நிலையானது என்பது பொய் " இதுவே பௌத்த சாரம்
மறுபிறப்பு : -
* கன்மம் , வீடுபேறு , மறுபிறப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளகின்றார்
* ஆனால் ஆன்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை
ஆத்மா :
* ஆத்ம பற்றி ஏதும் கூறாமல் மௌனமாக இருந்துவிட்டார் , பின்னாளில்
வந்தவர்கள் பலவிளக்கம்
4 உண்மைகள் / Four Noble truth
1. உலகம் துன்பமயமானது
2. அதற்க்கு கரணம் உண்டு . ஆசையே அதற்க்கு காரணம்
3. அதை நிறுத்திவிடலாம்
4. அதனை நிறுத்த ஒரு வலியுள்ளது , எண்வகை மார்க்கங்களை
கடைபிடிப்பதேஅது
எண்வகை மார்க்கங்கள் : / Eight fold of path
1. நல்ல எண்ணம்
2. நல்ல செயல்
3. நல்ல சொல்
5. நல்ல வாழ்க்கை
6. நல்ல தியானம்
7. நல்ல காட்சி
8. நல்ல முயற்சி
போதனைகள் :
=> அகிம்சை
=> எல்ல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல்
கடவுள் கொள்கை :
கடவுளை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை
புத்த சமய பிரிவுகள் :
புத்தருக்கு பின் 18 பிரிவுகள் ஏற்பட்டது
முக்கியப்பிரிவுகள் :
1. வைப்படிகர்கள்
2. சௌத்திராந்திரர்கள்
3. யோகக்காரர்கள்
4. மாத்தியமிகர்
ஹீனயார பிரிவு :
=> வைப்படிகர்களும் , சௌத்திராந்திர்களும் இப்பிரிவை சார்ந்தவர்கள்
=> தேரவாதம் , சர்வாஸ்திரவாதம் , அபிதர்மம் . உள்ளடக்கியது
=> புத்தர் , சமய தலைவராக கருதப்பட்டார்
=> உருவ வழிபாட்டை இவர்கள் நம்பவில்லை
=> இலங்கை மேற்குநாடுகளில் பரப்பினர்
=> இது குறுகிய வழி ( lesser vehicle )
மகாயான பிரிவு :
=> யோகக்காரர்கள் & மாத்யமிகர்கள் இப்பிரிவை சார்ந்தவர்கள்
=> இவர்கள் புத்தரை கடவுளாக வணங்கினர்
=> திபெத் , சீன , ஜப்பான் ஆகிய நாடுகளில் இப்பிரிவு பரவியது
=> பெருவழியினர் / Greater Vehichle
புத்த சமய நெறிகள் :
=> அகிம்சையை கடைபிடிப்பது
=> எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல்
=> துன்பத்திலிருந்து விடுதலை அடைய நிர்வாணத்தை கடைபிடிப்பது
நிர்வாணம் :
=> புத்தமார்கத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது
கொள்கைகள் :
1. எல்லா பொருள்களும் சூன்யம்
2. கடவுள் ஒருவரும் இல்லை
3. ஞானமே ஆன்மா
4. வினையும் மறுபிறப்பும் உண்டு
5. வினையை ஊட்ட ஒரு கடவுள் தேவையில்லை , அது தானே
சென்றடையும்
------------------------------------------------------------------------------------------------------------------
சமணம்:
" ஒரு இருட்டு அறையின் நடுவில் ஒரு எறியும் அகல்விளக்கை வைத்தால் \
எவ்வாறு இருள் விளக்கி ஒளி அந்த அறைமுழுதும் பரவி இருக்கின்றதோ
அதுபோல உயிர் அது தாங்கும் உடலின் பருமனுக்கு ஏற்ப இருக்கும் "
சீவன் = அறிவுள்ளது
அசீவன் = அறிவற்றது
அணு , அனுமானம் : anuvirtha
=> ஒவொரு பொருளையும் பிரித்துக்கொண்டே சென்றால் இறுதியில்
பிரிக்கமுடியாத ஒன்று வரும் அது அணு .
=> பிரிக்கமுடியாதசிறு அணுவின் மொத்த கூட்டமே இப்பெரிய உலகம் என்பர்
சமணர்
=> அணு வடிவமற்றது , ஆகையால் அதை பார்க்கமுடியாது , இதை
அனுமானத்தால் அறியலாம்
=> அணுக்களுக்கு குணமோ தன்மையோ இல்லை
போதனைகள் :
=> கடவுளை நம்பவில்லை .
=> மனிதர்களின் ஆன்ம ஒளியே கடவுள் என்கின்றனர் .
பஞ்சமகா விரதங்கள் / Mahaviratha
1. அகிம்சை => எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமை
2. சத்யம் => உண்மையை பேசுதல்
3. அஸ்தேயம் => திருடாமை
4. அபரிகிருகம் => தியாகம் , எல்லா செல்வங்களையும் துறத்தல்
5. பிரம்மச்சரியம் => துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுதல்
முதல் நான்கு வகையை கூறியவர் => பார்சவ நாதர்
ஐந்தாவதை கூறியவர் => மஹாவீரர்
5 th சிற்றின்ப விளையாண்மை
சமண சமய நெறிகள் :
=> கடவுளை நம்பவில்லை
=> மனிதனின் ஆன்ம ஒளியே கடவுள்
=> கர்மாவை நம்பினர்
=> துறவு மேற்கொண்டு வீடுபேறு அடைய 28 ஒழுக்கங்களை கடைபிடித்தனர்
அவை :
மாவிரதங்கள் ஐந்து => அகிம்சை ,
சத்யம் ,
அஸ்தேயம் ,
அபரிகிரகம் ,
பிரம்மச்சரியம்
சமிதி ஐந்து => இரியை ,
பாஷை ,
ஏசனை ,
ஆதான நிசபனை ,
உத்சார்க்கம்
ஐம்பொறி => ஆவஷ்யகம்
ஆறு => சாமயிகம் ,
துதி ,
வணக்கம் ,
பிரதி
கிர்மணம்,
கழுவாய் ,
விசர்க்கம்
லோசம் => திகம்பரம்
நீராடாமை
பலதேய்க்காமை
தரையில் படுத்தல்
நின்று உண்ணுதல்
ஒரு வேலை உணவு மட்டுமே உட்கொள்ளல்
சமணசமய பிரிவுகள் :
இரண்டு பிரிவுகள் கொண்டது
1. திகம்பரர்கள்
2. சுவேதாம்பரர்கள்
[ 3, ஸ்தானாக வாசிகள் ]
1. திகம்பரர்கள் :
* திக் + அம்பரம் ( ஆடை )
* ஆடையை துறந்தவர்கள்
* மஹாவீரரை பின்பற்றினர்
* உருவ வழிபாடு செதவர்கள் இப்பிரிவை சார்ந்தவர்கள்
* பண்டையகாலத்தில் தமிழ்நாட்டில் அதிகம் வாழ்ந்தவர்கள்
* தற்பொழுதும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்
* தமிழ் நூல்களில் இவர்களை சமணர் , அமணர் , ஆருகதர் , ஜைனர் , என
குறிக்கப்பட்டுள்ளது
2. ஸ்வேதாம்பரர்கள் :
* ஸ்வேதாம்பரம் = " வெண்ணிற ஆடை "
* வெண்ணிற ஆடை உடுத்தியவர்கள்
* ஆலயத்தில் உள்ள தீர்த்தங்கரர்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்தினர்
* உருவ வழிபாட்டை மேற்கொண்டனர்
வட இந்தியாவில் அதிகம் வாழ்ந்தனர்
3. ஸ்தானகவாசி :
* உருவ வழிபாட்டில் நம்பிக்கை அற்றவர்கள்
* சமண ஆகம நூல்களையே தீர்த்தங்கரராகவும் அருக கடவுளாகவும்
வணங்கினர் வடஇந்தியாவில் வாழ்ந்தனர்
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆறு தர்சனங்கள் :
1. நியாயம்
2. வைசேஷிகம்
3. சாங்கியம்
4.யோகம்
5. புருவ மீமாம்சை
6. உத்ரா மீமாம்சை
1. நியாயம் :
தோற்றுவித்தவர் : கௌதமர்
காலம் :
* வாசஸ்பதி என்பவர் அனைத்து தர்சனங்களுக்கும் விளக்கம் எழுதியுள்ளார்
* உண்மையை நிலைநாட்டுவதற்காக நையாயிகள் நான்கு முக்கியமான
அம்சங்களை தேர்வு செய்துள்ளனர் அவை
1. பிரமாதா : அறிவு நிகழ்வதற்கு அறிபவன் தேவை அவனே பிரமாதா
2. பிரமேயம் : அறிவை கொண்டு அறியப்படும் பொருள் பிரமேயம் எனப்படும்
3. பிரமாணம் : அறியப்படும் வழிகள்
4. பிரமிதி : அறிவு
=> பிரமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்தால் நையாயிகள் மதத்தை
பிராமண சத்திரம் என்றும் கூறுவர்
=> " காணும் பொருளுக்கும் காணும் மனதிற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது
=> தர்க்கம் செய்தே தீர்மானிக்க வேண்டும் என்கிறது .
=> தர்க முடிவைவிட தர்க முறைக்கே முக்கியத்துவம் தருகிறது
தர்க்க அளவைகள் ஆறு :
1. பிரத்யட்சம் - புலன்களால் நேரே காண்பது
2. அனுமானம் - யூகத்தின் அடிப்படையில் கொள்வது
3. ஆப்தவாக்கியம் - பிறர் உணர்ந்து கண்டதை கூறுவது
4. உபமானம் - வேற்றுமை காணுதல்
5. அருப்தா பத்தி
6. அனுபலப்தி
பதார்த்தங்கள் பதினாறு : 16
வைசேசிகர்களின் பதார்த்தங்கள் 7 = 1. திரவியம்
2. குணம்
3. தொழில்
4. சாதி
5. விசேடம்
6. சமவாயம்
7. இன்மை
=> இந்த ஏழு பதார்தத்தையும் பிரமேயம் எனும் ஒரு பதார்தத்தில் அடங்குவர்
நியாயவாதிகள்
=> நியாயவாதிகளின் பதார்த்தங்கள் 16 ( பிரமேயம் + 15 )
=> வைசேசிகர்களின் ஏழு பதார்த்தங்களுல் முதன்மையானது - திரவியம்
=> நியாயவாதிகளின் 16 பதார்த்தங்களும் முதன்மையானது - பிரமேயம்
=> வைசேசிகர்களில் முக்கியமானது பொருள்
=> நியாயதரிகளின் முக்கியமானது அப்பொருளை அறியும் வழி
-----------------------------------------------------------------
2. வைசேஷிகம் :
காலம் : கி.பி. 5ம் நூற்றாண்டு
தோற்றுவித்தவர் : கணநாதர்
=> 10 அதிகாரங்கள் கொண்டது . இரண்டு பிரிவுகள் (20 பாக்கள் )
=> பிரதசபதரால் இதற்க்கு உரை எழுதப்பட்டது
=> ஆனால் உதயணன் எழுதிய கிருஷ்ணவலி உரையே சிறந்ததாக
கருதப்படுகிறது
சிறந்த நூல்கள் :
* கிருஷ்ணாவலி
* கந்தலீ ( ஸ்ரீதர் எழுதியது )
இவை கூறும் பதார்த்தங்கள் ஏழு
திரவியங்கள் ஒன்பது
=> ஆன்மா இருப்பது உண்மை என்பர்
=> புறத்தே உள்ள பொருட்களும் உண்மை என்பர்
=> பொருட்கள் அழிந்தாலும் அதை உற்பத்தி செய்யும் அணுக்கள் அழிவதில்லை
ஐந்துவகை அணுக்கள் = நிலம் , நீர், காற்று , ஆகாயம் ,நெருப்பு
வைசேஷிக திரவியங்கள் ஒன்பது
1. நிலம்
2. நீர்
3. காற்று
4. ஆகாயம்
5.நெருப்பு
6. இடம்
7. காலம்
8. ஆன்மா
9. மனம்
இந்த ஒன்பதும் உலகை உண்டு பண்ணுகின்றது
அசத்காரிய வாதம் / ஆரம்ப வாதம்
" அணுக்கள் ஒன்றோடு ஒன்று செய்வதே சிருஷ்டியின் ஆரம்பம் "
=> அணுக்கள் அநாதியாக உள்ளன அவற்றை கொண்டு உலகை உற்பத்தி பண்ணுவதே
இறைவனின் தொழில்
சம்யோக சம்மந்தம் :
" ஒரு மேஜைக்கு அதன் மேல் உள்ள புத்தகத்திற்கும் உள்ள தொடர்பே சம்யோக
சம்மந்தம் " என்பர்
=> மேஜையையும் அதன் காலையும் பிரிக்கமுடியாத சம்மந்தம் இது சமவாயம் எனப்படும்
=> நூலுக்கும் புடவைக்குமான சம்மந்தம் இது
---------------------------------------------------------------------------
3. சாங்கியம் :
தோற்றுவித்தவர் : கபிலர் ( முறையாக முதலில் வெளியிட்டவர் )
* இவர் ஆன்மாவை ஏற்கவில்லை
* ஆன்மா அனுபவியாக மட்டுமே உள்ளது
* சாங்கியம் மிக பழமையானது
* பழமையான நூல் : சாங்கிய காரிகை
* சாங்கிய காரிகையை இயற்றியவர் : ஈஸ்வர கிருஷ்ணர்
சர்க்காரியா வாதம் :
* பிரகிருதி , புருடன் ஆகிய இரு பொருளால் உலகம் ஆனது
* பிரகிருதி மற்றம் அடையும் , புருடன் மற்றம் அடையாது
பரிணாமவாதம் :
" மண்ணை குழைத்து சுட்டபின்தான் பானையாக மாறும் , தயிராகும் அதுபோல
பிரகிருதி உலகமாக மாறும் அதுவே பரிணாமவாதம் ஆகும் "
=> முக்திக்கு ஞானமே வழி
பிரகிருதி & புருஷா :
பிரகிருதி = சத்துவம் , ரஜஸ் , தாமசம் ஆகியவை சேர்ந்தது
புருடன் = ஆத்மா
பிரகிருதியின் மூன்று குணங்கள் :
1. சத்துவம் :
* அறிவும் ஒளியும் உள்ளது
* இன்பமும் திருப்தியும் இதனாலே கிடைக்கிறது
* நெருப்பு நீராவி காற்று மேலெழும்புவதற்கு இதுவே கரணம்
2. ராஜசம் :
* தானும் இயங்கிக்கொண்டு பிறரையும் இயங்க செய்கிறது
* சத்துவமும் ரஜசும் இயக்குகிறது
* நெருப்பு பரவுவதும் , கற்று அடிப்பதும் , புலன்களால்
பொருள்களை அறிவதும் இதனாலே
3. தாமசம்:
* மந்தமானது
* அயர்வானது
* கனமானது
* மயக்கமானது
* இருள் போன்றது
* தூக்கத்திற்கு தாமஸமே காரணம்
------------------------------------------------------------------
4. யோகம் :
தோற்றுவித்தவர் : பதஞ்சலி முனிவர்
யோகம் பொருள் : " பிரிதல் / ஒன்றுதல் / சேருதல் "
காலம் : 2ம் நூற்றாண்டு
* இதற்க்கு வியாசர் வியாகரணம் எழுதினார்
* வீடுபேறு அடைய தியானமே சிறந்தது
அட்டாங்க யோகம் :
1. இயமம்
2. நியமம்
3. ஆசனம்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணம்
7. தியானம்
8. சமாதி
=> சமாதி , இதில் 2ம் நிலைதான் தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நிலை
=> கடவுள் உண்டு , முக்திக்கு யோகமே காரணம் என்பர்
1. இயமம் (5) - தன்னை அடக்குதல்
அகிம்சை , உண்மை , கள்ளாமை , பொருள் தவறாமை , பிரம்மச்சரியம்
மேற்கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடித்தல்
2. நியமம் (5) = தவம் , சுத்தி , திருப்தி ,ஞான நூல் ஆராய்ச்சி ஆகியவை செய்தல்
3 . ஆசனம் = எடுத்துக்காட்டு : மயூராஸனம் , பத்மாசனம்
4. பிராணாயாமம் = மந்திரம் ஜபம் மூலம் பிராணனை அடக்குதல்
5. பிரத்தியாகாரம் =
6. தாரணை = அமைதியாதல்
7. தியானம் = மனதை ஒன்றுதல்
8. சமாதி = மனம் சுயபோதத்திடை இழந்து இறையருளின் நிற்கும் நிலை .
போதாதீத நிலை ஆகும்
----------------------------------------------------------------------------------
மீமாம்சை :
= " நேர்பொருள் / விசாரித்தல் / ஆராய்ச்சி "
= யோகமே கடவுள் என்பர்
இரண்டுவகை மீமாம்சைகளை :
1. புருவ மீமாம்ஸை
2 .உத்திர மீமாம்சை
=> பிரமாணங்களை கொண்டு எழுந்தமையால் இது புருவ மீமாம்சை என
அழைக்கப்படுகிறது
=> உத்திரங்களை கொண்டு எழுந்தது ஆகையால் உத்ர மீமாம்சை எனபட்டது
5. புருவ மீமாம்சை :
* வேதத்தின் முற்பகுதி ஆராய்ச்சி செய்யக்கூடியது
காலம் : கி.பி .360
தோற்றுவித்தவர் : ஜைமினி முனிவர்
=> கல்ப சூத்திரம் பழமையான மீமாம்சை
=> புருவ காண்டம் எனவும் அழைக்கப்படுகிறத்து
=> சபர முனிவர் இதற்க்கு பாஷ்யம் எழுதியுள்ளார்
=> இதற்க்கு வழி நூல் எழுதியவர்கள் 1. குமரிலபட்டர் 2. பிரபகர்ப்பட்டார்
=> கருமமே சிறந்தது என கூறுவதினால் புருவ மீமாம்சை கரும மீமாம்சை எனவும்
அழைக்கப்படுகிறது
கடவுள் :
* கடவுள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை
* வேதத்தையே பரப்பிரம்மமாக ஏற்கிறது
* வேதத்தை அபெர்ஜிசியம் என அலைகிறது
=> வேதத்தில் கூறும் அவன் உலகை அறிந்தவன் என்பதில் அவன் என்ற கடவுளை
ஏற்பதில் " யாகம் ' என்றே பதில் சொல்லுவர்
உலகம் :
தோன்றி தோன்றி அழியக்கூடியது
கன்மத்த முழுமுதல் பொருளாக கொள்வர்
மீமாம்சை கன்மம் 3 வகை :
1. காமிய கன்மம் ( இதன் பலன் புண்ணியம் )
2. பிரசித்த கன்மம் ( இதன் பலன் புண்ணியம் )
3. நித்ய கன்மம்
2 வகை 1. பட்ட்டாச்சாரிய மதம்
2. பிரபாகர் மதம்
=> பிரபாகர் மதம் "குருமாதம் " எனவும் அழைக்கப்படுகிறது
=> ஞானம் கேட்டபோது கல்போல் இருப்பதே முக்தி என்பர் இது வினைகெடு முக்தி
எனவும் அழைக்கப்படுகிறது .
6. உத்ர மீமாம்சை :
தோற்றுவித்தவர் : பதராயணர் (எ ) வேத வியாசர்
பிறபெயர்கள் : பாதராயண சூத்திரம்
வேதாந்த சூத்திரம்
உத்திர மீமாம்சை
வேதாந்தம்
* ஞானமே சிறந்தது என்று கூறுகிறது
* இது வேதங்களின் இறுதி பகுதி ஆராய்ச்சி ஆகும்
வேதத்தின் மகா வாக்கியங்கள் : தத்வமஸி
அகம் பிரம்மாஸ்மி = நானே பிரம்மம்
---------------------------------------------------------------
வேதாந்தம் :
* வேதங்களின் இறுதி பகுதி ஆராய்ச்சி வேதாந்தம் எனப்படும்
* உத்திரமீமாம்ஸை
* வேதவியாசர் எழுதினார்
* இவற்றை விளக்க பிரம்மா சூத்திரம் எழுதியுள்ளார்
* பிரம்ம சூத்திரங்களை பாஷ்யம் எழுதியவர்களும் முக்கியமானவர்கள்
சங்கரர் , இராமானுஜர் , மத்வர் , நிம்பர்கர் , வல்லபாச்சார்யர்
* பிரம்மமே சிறந்தது என்று கூறுகிறது
வேதாந்த பள்ளிகள் :
1. த்வைதம்
2. அத்வைதம்
3. வஷிட்டாத்வைதம்
4. பேத அத்வைதம்
5. சுத்த அத்வைதம்
1. த்வைதம் :
தோற்றுவித்தவர் : மத்வர்
* " ஜீவாத்மா , பரமாத்மா வேறுவேறானவை
* நாராயணனே பரப்பிரம்மம் என்கிறார்
* அவரே சிருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம் ஆகியவற்றிற்கு கர்த்தா
* ஜீவாத்மாக்கள் ப்ருகிருதி சம்பந்தம் கழிந்து பரமாத்மாவை அடைவதே மோக்சம்
* உலகம் உண்மையானது , ஜீவாத்மாக்கள் பிறப்பு இருப்பு உண்டு உண்டு என்கிறார்
2. அத்வைதம் :
தோற்றுவித்தவர் : சங்கர் பகவத் பாதர்
காலம் : 7ம் நூற்றாண்டு
* " தத்துவம் ஒன்றே உள்ளது , இரண்டு அல்ல ."
* ஜீவாத்மா இல்லை பரமாத்மா மட்டுமே உண்டு என்கிறார்
* அந்த பிரமத்தை மாயை மறைகிறது
* அங் ஞானம் அகன்று ஞான பிரமம் என்று தன்னை உணர்வதே உண்மை ஞானம்
* அந்த ஞானம் ஏற்பட்டால் ஜீவாத்மாக்கள் பராமத்ததோடு ஐக்கியம் ஆகிவிடும்
* பிரமத்திற்கு உருவமில்லை குணங்கள் இல்லை
* கேவள அத்வைதம் என்றும் அழைக்கப்படுகிறது = * உலகம் மாயா தோற்றம் , ஒரு பிரம்மா ,பல ஆன்ம
நிர்விசேச சிர் மாத்திர பிரம்மம் . :
" எந்த விசேஷங்களும் இல்லாத ஞான மாத்திரமே பரம ஸ்வரூபம் "
வேதாந்த மதம் ":
இதை பின்பற்றியவர்கள் வேதாந்திகள்
" அகம் பிரம்மஷ்மி " = நான் பிரம்மமாய் இருக்கிறேன்
3. வசிஷ்டாத்துவைதம் :
தோற்றுவித்தவர் : இராமானுஜர்
காலம் : 11ம் நூற்றாண்டு
* " பிரமம் ஒன்றுதான் மெய் என்கிறார் , மற்றவையெல்லாம் பொய் என்கிறார்
* " பிரம்மம் , ஜீவர்கள் , ப்ரகிருதி அனைத்தும் மெய் , இம் மூன்றும் வெல்வேறு
தத்துவங்களை ஒன்றுக்கொன்று சரீர சரீரி சம்மந்தமாக உள்ளது
* ஜீவர்கள் இப்ராகிருதி இவ்விரண்டும் பிரமத்திற்குள் அடக்கம் " ஆகையால்
தத்துவம் ஒன்றுதான்
* பிரமத்திற்கு விக்ரகங்கள் உண்டு
* மாயைக்கு பிரமத்தை மறைக்கும் ஆற்றல் இல்லை
* மாயை பிரமத்திற்குள் அடக்கம்
* மாயை சக்தியால் பிரமத்தை படைத்து அழிகிறது
* நாராயணனே பிரம்மம்
* பக்தியே மோட்சத்திற்கான வழி
* விசேஷங்களுடன் கூடிய பிரம்மம் ஒன்றே " என்று கூறுவதால் இது
வசிஷ்டாத்த்துவிதம் எனப்பட்டது
* காரணமாகிய பிரம்மமும் உண்மை காரியமாகிய உலகமும் உண்மை
4. பேத அத்வைதம் :
தோற்றுவித்தவர் : நிம்பர்கர்
இயற்றியது : வேதாந்த பாரிஜாத சௌரம்
தாசு சுலோகி ( சத் அசத் பிரமம் )
* ஜத்வைத அத்வைதம் எனவும் அழைக்கப்படுகிறது
* இராமானுஜரின் வசிஷ்டாத்வைதத்தை விளக்கி கூறுவதே பேத அத்வைதமாகும்
* உலகம் பிரமம் இரண்டும் ஒன்றே
* கிருஷ்ண பிரமர் அனைத்தும் அறிவர்
* இவர்கள் கிருஷ்ண வழிபாட்டை செய்தனர்
5. சுத்த அத்வைதம் :
தோற்றுவித்தவர் : வல்லபாச்சார்யர்
* பிரமம் மட்டுமே உள்ளது
* உலகம் பிரமம் இரண்டும் தனித்தனியாக தோன்றலாம் ஆனால் தனித்தனி அல்ல
பிரமதிப்பிற்குள் உலகம் அடக்கம்
* " ஒருபொருள் வாதம் "
==========================================================================
* தசம குணம் மேலோங்கும்போது தன்மாத்திரைகள் தோன்றும்
* பஞ்சப்பூதங்களுக்கு காரணமான மூலப்பொருள் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு
* சாக்கியர்கள் கடவுள் இல்லை என்பர் ஆகையால் அதை நிரீசுவர சாங்கியம் என்பர்
* யோகம் கடவுள் உண்டு என்பர் ஆகையால் அதை செஸ்பர சாங்கியம் என்பர்
* யோகம் - * வீடுபேறு அடைய பக்த்தியே சிறந்தது என்பர்
* வீடுபேறு அக்கடவுளால் அழிக்கமுடியாது ஆனால் உதவ
முடியும் என்பர்
கனவுலகம் ; கனவுலகம் :
* உலகம் உண்மை என நிரூபிக்க முயன்றவர்களுள் முதன்மையானவர் கௌடபாதர்
* பிரம்மத்தில் கட்டுண்ட நிலையில் ஜீவாத்மா உள்ளது , இதனையே உபநிஷத்
" தத்வமஸி , அகம் பிரம்மாஸ்மி " என்பர்
* நிலையற்ற இந்த உலகத்தை நிலையான ஒரு பொருளில் இருந்து உற்பத்தியாக்குவது மாயை
" மண்ணிலிருந்து பானை உற்பத்தியாவதைப்போல "
" மாயையோடு சேர்ந்த பிரம்மனே ஈஸ்வரன் "
* மாயையோடு சேராத நிலையே குணங்கள் நிறைந்தது , அதுவே மிகவும் உயர்ந்தது , இதுவே நிர்குண பிரம்மம் என வேதாந்திகள் சொல்வர்
வேதாந்திகள் :
* உலகம் உண்மையானது அல்ல .
உலகம் 3 :
1. சத் - பிரமம்
2. அசத் - ஏதுமிலை
3. சதசத் விலாசனம் - சத் அசத் இரண்டிற்கும் இடைப்பட்ட உலகம்
மெய் பொருள்கள் 3 :
1 . பிரதியாசிகம் - கனவுலகம்
2. விவகாரிகம் - நனவுலகம்
3. பாரமர்த்திகம் - கனவுலக திரிபு ( காட்சி கயிறு என அறிதல் )
சகுன பிரமம் :
* குணங்கள் கடந்த நிலையில் இருந்து பிரம்மம் சற்று கீழிறங்கி
குணங்களோடு சேருவதை சகுண பிரம்மம் என்பர்
* சகுண பிரம்மம்தான் ஈசுவரன் ஆகையால் வேதாந்திகள்
ஈசுவரனுக்கு முக்கியத்துவம் தரவில்லை
* சைவசித்தாந்திகள் ஈசுவரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , இதுவே சைவசித்தாந்திகளுக்கும் வேதாந்திகளுக்குமான வேறுபாடு
வித்தை - அறிவு
அவித்தை - அறியாமை
----------------------------------------------------------------------
மாயையின் இரண்டு இயல்பு :
1. ஆவரணம் : உள்ளதை மறைத்தது காட்டுவது
2. விசேடம் : இல்லாததை இருப்பதாக காட்டுவது
ஆவரண சக்திமூலம் உண்மை பொருளாகிய பிரமத்தை மாயை மறைகிறது
விசேப சக்திமூலம் உலகை மாயை மறைகிறது
-----------------------------------------------------------------------------------------
ஞானம் பெற வழிகள் :
நல்ல ஒழுக்கம் , நற்பண்பு , இறைவழிபாடு .
ஆன்மாவிற்கு உரிய முக்கிய குணம் ஞானமுடைமை . இதை இராமானுஜர் " தர்மபூத ஞானம் " என்கிறார்
-----------------------------------------------------------------------------------------------------
சைவசித்தாந்தம் :
* கடவுள் உண்டு என்பதற்கு " சுருதி பிரமானத்தையே " சைவசித்தாந்திகள் முக்கியமாக கொள்வர் .
ஆ - பாசம்
க - பசு
ம - பதி
சைவாகமன்கள் 28 - இதில் 10 இறைவனால் நேராக அருளப்பட்டவை
ஒவ்வொரு காண்டமும் நான்கு பாகங்களை கொண்டது
1. சரியா காண்டம்
2. கிரியா காண்டம்
3. யோக காண்டம்
4. ஞான காண்டம்
* மெய்கண்டார்
No comments:
Post a Comment