சைவம்
=>" சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்ட மதம் "
=> பிற பெயர்கள் : சிவநெறி , சைவ மதம்
=> சைவம் = முப்பொருள் ( பதி , பசு , பாசம் )
=> சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி பசு பாசத்தின்
குறிக்கிறத்து
பதி பசு பாசம் :
பதி (எ ) கடவுள் : = " கர்த்தா / கடவுள் / முழுமுதற் // சிவம்
* எங்கும் வியாபித்தவன்
* ஆதியும் அந்தமும் இல்லாதவன்
* உலகை ஆள்பவன்
* ஒருவனாய் இருப்பவன்
பசு ( எ ) உயிர் :
* கடவுள் போன்று தோற்றமும் அழிவும் இல்லாதது * உடலினை பெறுவதற்குமுன் அறிவு , இச்சை ,செயல்
என்பது இன்றி அறியாமையில் இருக்கும்
பாசம் ( எ ) தளை :
* உயிர்களை அடிமை செய்யும் பொருள்களாகும்
* போகப்பொருள் என்பர்
-------------------------------------------------------------------------------------------------------
Traces of saivisham in vedas & upanisath
=> கி .மு . 1500 -500 இடைப்பட்ட வேதகாலத்தில் நூல்களில் சொல்லப்பட்டுள்ள இயமன் , உருத்திரன் , ஆகிய தெய்வங்களின் சேர்க்கையே ஈசன் ஏன் பின்னாளில் வழங்கப்பட்டது .=> ரிக் வேதத்தில் ருத்திரன் பற்றி சொல்லப்பட்டுள்ளது
=> உபநிடதங்களில் சிவ வழிபாடு கூறப்பட்டுள்ளது .
ருத்ர சிவா
=> வேதகாலத்தில் ருத்ரன் பற்றி குறிப்பு உள்ளது
=> ருத்ரன் என்பவன் தீமைகளை அளிப்பவனாகவும் , நன்மைகளின்
காவலனாகவும் வணங்கப்பட்டு வந்துள்ளான்
=> சுவேந்தம்பர உபநிஷத்தில் சிவபெருமான் மஹாதேவராக
போற்றப்படுகிறார்
=> கேன உபநிஷத்தில் சிவபெருமானின் தேவி உமா ஹிமவாதியாக மிக
உயர்வாக போற்றப்படுகிறது
=> அதர்வண வேதத்தில் ருத்ரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து
கூறப்பட்டுள்ளது
=> ருத்ரன் சிறப்பு பெயர்கள் :
பாவா
சர்வா
பசுபதி
உக்ர மகாதேவா
ஈசானா
-------------------------------------------------------------------------------------------------------
முக்திக்கான வழிகள் :
முக்தி மார்க்கம் 4 :
1. சரியை
2. கிரியை
3. யோகம்
4. ஞானம்
1. சரியை:
* தச மார்க்கம் or அடிமை மார்க்கம் என அழைக்கப்படுகிறது
* சாலோகம் = இறைவன் உலகத்தில் வாழ்தல்
* ஈசுவர திருமேனியை கொண்டிருக்கும் இவ்வுலகை அடைந்து
இன்புற்றிருத்தத்தால்
* இறைவனிடம் அடிமையாக இருந்து தொண்டு செய்வதின் மூலம்
அவனை அடைதல்
2 . கிரியை :
* சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது
* சமீபம் = இறைவனிடத்தில் சமீபத்தில் ( அருகில் ) உரைத்தல்
* சரியை இன்பத்தை பெற்று மகனை போன்று அருகில் இருந்து
இறைவனுக்கு சேவை செய்வதின் மூலம் முக்தி அடைதல்
3. யோகம் :
* சகமார்க்கம்
* சாரூபம் = இறைவனுடைய ரூபம் போன்று அடைதல்
* இறைவன் உருவம்போன்று ஒரு உருவத்தை பெற்று இன்பம்
காணுதல்
* தோழமைநெறி
எடுத்துக்காட்டு : சுந்தரர் இறைவனோடு தோழமைநெறியில்
வாழ்ந்தவர்
4. ஞானம் :
* சன்மார்க்கம்
* சாயுட்ரியம் , பரமுத்தி
* இறைவனோடு நித்தியானந்தம் அனுபவித்து பிறவி
அறுத்து வாழுதல்
இறைவன் இருப்பதை அறிவதற்கான 4 வகை :
1. கேட்டல்
2. சிந்தித்தல்
3. தெளித்தால்
4. நிட்டைகூடல்
ஞானம் = அறிவு
ஞாதிரு = அறிபவன்
நேயம் = அறியப்படும் பொருள்
------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment