சைவம் & வைணவம்
சைவம்
- இதன் முழு முதற் கடவுள் சிவபெருமான்
- திருநீறு , ருத்ராக்ஷ மாலை இதன் சமய சின்னம்
- சிவன் , பார்வதி , விநாயகர் ,முருகன்
- வேதத்தில் ருத்ரன் பற்றி கூறப்பட்டுள்ளது
சைவத்தின் வகைகள் :-
சைவ நெறி மூன்று வகை : 1.ஆதிமார்கம்
2. மந்திர மார்க்கம்
3. ஏனையவை
1. ஆதிமார்கம் 3 பிரிவு .- 1.பாசுபதம்
2. காளாமுகம்
3 .காபலிக்கம் -> அகோரம்
2. மந்திரமார்கம் இரண்டு பிரிவு : 1.சித்தாந்தம் -தமிழ் சித்தாந்தம் 2. புரசித்தாந்தம்4 -1. வாமனன்
2. தட்சிணம்
3. யாமளம்
4. குலமார்க்கம் =>திரிகம்
=>காஷ்மீரசைவம்
=> குப்ஜிகம்
=> காளிக்குளம்
=> ஸ்ரீகுலம்
=> நேந்திரம்
3. ஏனையவை : சிரெத்தம்
வீரசைவம்
சித்தாந்தம்
சாவகச்சைவம்
சைவ பிரிவுகளில் முக்கியமானவை :-
1. காசுமீர் சைவம்
-சைவ சமயத்தின் ஒரு பகுதி
- காஸ்மீரில் தோன்றியது
- இதில் சிறந்து விளங்கியவர்கள் : வசுகுப்தர் ,
சோமனந்தர் ,
அபிநவகுப்தர்
- இது வேதத்தை மறுக்கிறது
- சாதியை நிராகிறக்கிறது
- சிவன்தான் அனைத்தும் என்கிறது
2. சித்தாந்த சைவம் :
- சிவனே முழுமுதற் கடவுள்
- " சிந்தித்து கண்டறிந்த முடிவான உண்மை " என
பொருள்படும்
- " வேதாந்தம் எனும் மரத்தில் காய்த்த பழம் சைவ
சித்தாந்தம் "- குமரகுபரர்
- சைவம் என்றால் முப்பொருள் என்று அர்த்தம்
3. வீர சைவம் :
- " லிங்காயத்த மதம் " என்றும் அழைப்பர்
- சிவனே முழுமுதற் கடவுள்
- லிங்கத்தை கையிலும் கழுத்திலும் அணிந்துகொண்டனர்
- இஷ்டலிங்க வழிபாடு மட்டுமே செய்தனர்
- கோவில்வழிபாடு , சடங்குகள் , சம்ப்ரதாயம் , சாதி
ஆகியவற்றை ஆதரிக்கவில்லை
- இதை தோற்றுவித்தவர் பசவண்ணர் (கி .பி 1125-1165)
- கன்னட நாட்டை சார்ந்தவர்.பிராமணர்குலம்
- 14ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பரவியது
- துறைமங்கள சிவப்பிரகாசர் இதை வலுவாக்கினர்
- மூன்று வகை கொண்டது 1. சாமானிய வீர சைவம்
2. விசேட வீர சைவம்
3. நிராபர வீர சைவம்
4. பாசுபதம் :
- உடல் முழுதும் திருநீறிட்டு , மொட்டைத்தலையுடன் or
குடுமிவைத்துக்கொண்டு இருப்பார்
- லிங்கவழிபாடு செய்தனர்
- உயிர் பலியிடுதல், நரமாமிசம் உண்பது
5. காபலிக்கம் :-
- எலும்பு , மண்டைஓடுகளை மலையாக
அணிந்துகொண்டவர்கள்
- இரண்டு வகையினர் உண்டு .
1. பிராமணர்கள்
2. பிராமணர்கள் அல்லாதவர்கள்
6.காளாமுகம் :-
- லகுலீச பாசுபதம் என அழைக்கப்பட்டது
- கல்வியில் சிறந்தவர்களாக திகழ்ந்தார்
- ராசி , சக்தி , பண்டிதர் என தங்களின் பெயருக்கு பின்னல்
வைத்துக்கொண்டனர்
6. சைவசித்தாந்தம்:-
- அடிப்படை தத்துவம்மூன்று
1.பதி ( இறைவன் )
2. பசு ( உயிர்கள் )
3. பாசம் ( மும்மலங்கள் )
- இம்மூன்றும் முதலும் முடிவும் இல்லாதவை
1. பதி (இறைவன் ) :-
- அறிவு வடிவாக இருப்பவன்
- எல்லாம் அறிந்தவன்
- எங்கும் இருப்பவன்
2. பசு ( உயிர்கள் ) :-
-அறிவுள்ளவை ஆனால் மலர்களால்
பிணைக்கப்பட்டு இறைவனின் துணையோடு
மலநீக்கம் பெறுபவை
3. பாசம் (மலங்கள் ):-
-மூன்று வகை :
ஆணவம் ,
கன்மம் ,
மாயை
ஆணவம் - முதன்மையானது
- இரண்டு வகை பாதிப்பை உயிர்களுக்கு
கொடுக்கும்
-அறிவை கீழாக கொண்டுசெல்லக்கூடியது
கன்மம் - கர்மவினைகள் இரண்டு 1. நல்வினை
2. தீவினை
3வகை வினைகள்
1. பலவினை ( சஞ்சிதம் )
2. நுகர்வினை ( பிராப்தம் )
3. ஏறுவினை ( ஆகாமியம் )
மாயை - உயிர் நுகர்ச்சிக்கு தேவையானவற்றை
படைக்கிறது
- மிக நுண்ணியது
-இறைவனடியில் உள்ளது
- அண்ட உற்பத்திக்கு காரணம்
3வகை - 1. சுத்த மாயை ,
2. அசுத்த மாயை
3. பிரகிருதி மாயை
வைணவம்
- விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக கொண்டு வணங்கக்கூடியவர்கள்
- திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோகநித்திரையில் இருப்பவர் விஷ்ணு
- தீமைகள் ஓங்கும் பொது திருமால் அவதாரமெடுப்பர் என்பர் ( பத்து அவதாரங்கள் )
- இதன் முக்கிய நூல்கள் - வேதம்
உபநிஷத்
பகவத்கீதை
பாஞ்சராத்ர ஆகமம்
இதிகாசங்கள்
பாகவதம்
- தத்துவங்கள் : இராமானுஜர் பரப்பிய வஷிட்டாத்வைத தத்துவம்
- வைணவம் சங்கரர் கூறிய ஆறு மதங்களுள் ஒன்று
- 5 குறிகள் கொண்டது = பஞ்ச சம்ஸ்காரம் எனவும் அழைக்கப்படுகிறது
- 1 தாபம் ,
2.புண்டரம் ,
3. நாமம் ,
4. மந்திரம் ,
5. அர்ச்சனம்
- வியூகவதாரம் 4வகை : 1. வசுதேவர் ,
2. சங்கர்சனர் ,
3. பிராத்தியும்னர் ,
4. அநிருத்தர் .
- அவதாரங்கள் : 10 .
1. மச்சம் அவதாரம் ,
2. கூர்ம அவதாரம் ,
3. வராக அவதாரம் ,
4. நரசிங்க அவதாரம் ,
5. வாமன அவதாரம் ,
6. பரசுராம அவதாரம் ,
7. ராமர் ,
8. பலராமர் ,
9. கிருஷ்ணர் ,
10. கல்கி அவதாரம்
பாகவதம் :
- 36000 சுலோகம் கொண்டது .
- பஞ்சராத்திரர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்
- வாஸுதேவ கிருஷ்ணனை மையமாக கொண்டு வணங்குபவர்கள்
- இதன் அடிப்படையிலேயே வைணவம் தோன்றியது
- தேவகி மைந்தன் கிருஷ்ணன்
- "ஆநிரை செல்வன் " ( மாடு மேய்த்தவன்
- கி .பி 5 இல் அஷ்டத்யாயி யில் வஸுதேவ பற்றிய குறிப்பு உள்ளது
- கி .பி .2 இல் வஸுதேவ வழிபாடு முக்கியத்துவம் பெற்ற கருட தூண்
கல்வெட்டு மூலம் அறியலாம்
- ஹெலியோடோரஸ் வசுதேவர் பக்தர் ஆனார்
- நாராயணர் , வஸுதேவர் , கிருஷ்ணர் மூவரும் ஒருவரே என
தைத்ரீய சாகை கூறுகிறது
- கிருஷ்ணரின் மாராப்பு வழியினர் :
பலதேவர்
வஸுதேவர்
விருஷ்ணர் பிராத்தும்னார்
சம்பா
அநிருத்த
- பாகவதத்தில் முக்கிய வழிபாடு வஸுதேவ வழிபாடு ஆகும்
இது ஐந்து வகை : 1. பர
2. வியூக
3. வியாபா
4. அந்தராயி
5. அர்ச்சா
- வியூகம் = உருவம் அரவமற்ற வழிபாடு ஆகும்
- அந்தரயாமின் = ஒவொருவரின் உள்ளார்ந்த வெளிப்பாடு
- அர்ச்சா = நிலையான உருவ வழிபாடு
- வஸுதேவர் ஆறு குணங்கள் :
1. வியுகநிலை ,
2. ஞானம் ,
3. ஐஸ்வர்யம் ,
4. சக்தி ,
5. பல ,
6. வீர்யம் ,
7. தேஜஸ் ,
- மகாபாரத்தில் வியூகம் பற்றி கூறப்பட்டுள்ளது .
- பிற பெயர்கள் : மகா பாகவதம் ,
வியாசர் பாகவதம்
அபௌருஷயம் ( மனிதனால் வழங்கப்பட்டது )
ஓலைப்பட பிராமணம்
எழுத்தாக்கிழவி
ஸ்ரீ வைஷ்ணவம் :
- ஸ்ரீ என்ற அன்னை தத்துவத்தை அடிப்படையாக கொண்டது
- ஸ்ரீ வைஷ்ணவம் எனவும் அழைக்கப்பட்டது
- " தயார் " என அழைத்தனர்
- ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மி திருமாலின் மார்பில் உறைந்திருப்பவளாக
கருத்தப்பட்டாள்
- இராமானுஜருக்கு பின்னல் ஸ்ரீ அன்னை வெளிப்பாடு அதிகரித்தது
- இது இரண்டு பிரிவுகள் கொண்டது
1. வடகலை
2. தென்கலை
1. வடகலை :
- ஐயங்கார் சமூகத்தில் ஒரு பிரிவு
- வேதாந்த தேசிகரால் தோற்றுவிக்கப்பட்டது (
இராமானுஜரின் தத்துவங்களை தழுவி )
- U வடிவ நாமம் இட்டனர்
- மகாலக்ஷ்மியின் அடையாளங்கள் :
திருமண் (திருநாமம் ஸ்ரீசூர்ணம் )
- தமிழ்நாடு , ஆந்திர ,கர்நாடக ஆகிய இடங்களில் பரவியது
- மொழி : தமிழ்
- இவர்கள் வேத வழியினர் என்பர்
2. தென்கலை :
- மணவாள மாமுனிகள் மற்றும் பிள்ளைலோகாட்சரியரால்
தோற்றுவிக்கப்பட்டது (இராமானுஜரின் தத்துவங்களை தழுவி )
- Y வடிவ நாமம் இட்டனர்
- தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இம்முறை பின்பற்ற
படுகிறது (ஸ்ரீ ஆண்டாள் ,ஸ்ரீ ரங்கம் ஆகிய இடங்களில்
- மொழி : தமிழ்
- இவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த வழியினர்
- தமிழ்மொழியிலுள்ள ஆழ்வார்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்தனர்
ஆறு மாதங்கள் / ஷன் மாதங்கள் :
- சங்கரரால் கூறப்பட்ட ஆறு மதங்கள்
1. சைவம்
2. வைணவம்
3. சாக்தம்
4. காணாபத்யம்
5. கௌமாரம்
6. சௌரம்
3. சாக்தம்
- சக்தியே கடவுளாக வணங்கிய மதம்
- வாகனம் : சிங்கம்
- சக்திதாசன் என்று தங்களை அழைத்துக்கொண்டனர்
- மந்திரம் : ஓம் உமாதேவியை நமஹ
- இரண்டு வகையினர் : 1. வாமாச்சாரர்கள் ,
2. தட்சிணாசாரர்கள்
- வாமாச்சாரர்கள் வேதவிதிகளை வணங்கினர்
- தட்சிணாசாரர்கள் => வேதத்தை பின்பற்றினர்
=> மூதாதையருக்கு கண்டன் செலுத்துதல்
=> வேள்விகள் செய்தனர்
- சதோதேவியானா தாட்சயினியின் உடல் விழுந்த 51 சக்தி
பீடங்களில் சக்தி வழிபாடு நடைபெறுகிறது
- மூதேவி வழிபாடு முதன்முதலாக கைலாதநாதர் ஆலயத்தில்
காணப்பட்டது
- கொற்றவை வழிபாடே பல்லவர் காலத்தில் துர்க்கை வழிபாடாக
ஆனது
4. கௌமாரம் :
- முருக வழிபாடு
- பரிவார கடவுளாகவும் துணை கடவுளாகவும்
வணங்கப்பட்டார்
- ஷண்மதங்களுள் ஓன்று
- சிவபெருமான் , பார்வதி புத்திரன் கார்த்திகேயனை
வணங்கக்கூடிய மதம்
- கௌ = " மயில் "
( முருக மயில் வாகனம் என்பதால் )
- மந்திரம் : ஓம் சரவணா பவ
- ஆயுதம் : வேல்
- மனைவிகள் : வள்ளி , தெய்வானை .
- சமயக்குறி : நெற்றியில் திருநீறு , கழுத்தில் ருத்ராக்ஷம்
- வாகனம் : மயில்
5. காணாபத்யம் :
- முழுமுதற் கடவுள் விநாயகர் / கணபதி
- ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களுள் ஓன்று
- அனைத்து பிரிவுகளையும் சார்ந்த இந்துக்கள் வனாகக்கூடிய
கடவுள்
- பணிகள்,சுபகாரியங்கள் , சமயநிகழ்வுகள் ஆரம்பிக்கும்
முன்னர் வணக்கப்படுகிறது
- கி .பி .5 ம் நூற்றாண்டிலிருந்து இவ்வழிபாடு நடைபெறுகிறது
- மோரியா கோசாவி என்பவரால் இப்பிரிவு பிரபலமடைந்தது
- மோர்கான் கோவில் காட்டினார்
- 19ம் நூற்றாண்டில் மஹாராஷ்டிராவில் பிரபலமடைந்தது
- சமயக்குறியீடு : * நெற்றியில் குங்குமம் இடுதல்
* தோள்களில் யானைமுகம் பொரித்தல்
* தந்தம் உரு பொரித்தல்
- மந்திரம் : ஓம் கணபதியே நமஹ
- வாகனம் : மூசிகன் / மூஞ்சூர்
" நாயகன் இல்லாதவன் "
அநாயகைக நாயகம் = அநாயக + ஏக + நாயகன்
விநாயகிருக்குமேல் வேறொரு நாயகன் இல்லை
- ஓம் எனும் பிரணவத்தின் வடிவானவன்
- உடைந்த கொம்பு : காயமுகாசுரனை வதைக்க பயன்படுத்தினர்
" ஐந்து கரத்தனை யானை முகத்தனை "- திருமூலர்
6. சௌரம் / சூரிய வழிபாடு :
- சூரியனை கடவுளாக வணங்கப்பட்ட மதம்
- பேரொளி வடிவானவனை வணங்க வேண்டும் எனப்படும்
- பஞ்சாங்கங்களில் சூரிய சஞ்சாரங்களை கணக்கிடுவதை
சௌரமானம் என்பர்
- சந்திர சஞ்சாரத்தை கணக்கிடுவதை சந்திரமானம் என்பர்
- சௌரம் என்பது தமிழ் அகராதியில் சூரியன்.
- கோவில் : தமிழ்நாடு கும்பகோணம் , சூரியனார் கோவில் ,
- ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது
- சிலப்பதிகாரத்தில் " உச்சிக்கிழவன் கோட்டம் என சூரியனை
குறிக்கின்றது
- சங்ககாலத்தில் சூரியும் வழிபாடு கூறப்பட்டுள்ளது
- மந்திரம் : காயத்திரி மந்திரம் ( சூரிய துதி )
வாகனம் : 7 குதிரைகள்
No comments:
Post a Comment