Monday, 27 August 2018

9. TEMPLE ARCHITECTURE



கோவில் கட்டிட கலை :


               =>  ஆகமங்களில் கோவில்களின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் 
                      என்று கூறப்பட்டுள்ளது 
               =>  மயமாதம் , மானசாரம் எனும் நூல்களை மாயன் என்பவர் 
                       எழுதியுள்ளார் . இதில் கோவில்கள் கட்டிட அமைப்பு பற்றி 
                       கூறப்பட்டுள்ளது 

3வகை கோவில்கள் :

1. நாகரம்            -          மத்திய இந்தியாவில் இவ்வகை கோவில்கள் உள்ளது 
2. வேசரம்          -          கிருஷ்ண to நர்மதா வரை உள்ள கோவில்கள் 
                                          இவ்வகையது
3. திராவிடம்      -         தமிழ்நாடு ( நெல்லூர் கிருஷ்ணா to கன்னியாகுமரிவரை )


கோவிலின் அங்கங்கள் :

1. கருவரை     -       கடவுள் அமைந்திருக்கும் இடம் 

2. அர்த்தமண்டபம் , 
         முகமண்டபம் , 
         முன்மண்டபம்       -     கருவறையின் முன் பகுதி 

3. அந்தராளம் / இடைநாளி - கருவறையும் முன்மண்டபத்தையும் இணைப்பது 

4. வாகன மண்டபம்      - வாகனங்கள் வைக்கும் பகுதி 

5. நூற்றுக்கால் மண்டபம் 
6. ஆயிரம்கால் மண்டபம் 

7. கல்யாணமண்டபம்      -   இறைவனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் பகுதி


8. வசந்தமண்டபம்  - கோடைகால வசந்தவிழா நடைபெறும் இடம்  

9. பள்ளியறை  - கடவுள் சயனிக்கும் இடம் 
10 . மடப்பள்ளி - அன்னதான உணவு சமைக்கும் இடம் 
12. விமானம் - கருவறையின் அமைப்பு 
13. கொடிமரம் ( துவஜஸ்தம்பம் )




கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் :


கோவில் தத்துவங்கள் :

     கோபுரம்   -  கோவிலின் நுழைவாயிலை அமைந்திருப்பது 
                          -  பாதமாக கருதப்படுகிறது 
                          -   பல்லவர்காலத்திற்கு பின் கோபுரம் அமைக்கும் முறை 
                             ஏற்பட்டது 

  கொடிமரம்  -    மஹாஉற்சவம் நடைபெறும் கோவில்களில் கொடிமரம் 
                                அமைக்கப்பட்டிருக்கும் 
                            -   அறியாமையை கோடியில் ஏற்றி உயிர்களை சூழ்ந்துள்ள 
                                 இருளை நீக்கம் செய்வது . 

      பலிபீடம்    -    தான் எனும் ஆணவத்தை பலியிடுதல் 

              நந்தி     -   சுத்த ஜீவாத்மா . 
                             -  இறைவனிடம் சரணடைவது . 
                             -   அறியாமை , பாசம் ஆகியவற்றின் அடையாளம் இது 

       கருவறை   -  மனித இதயம் 

                 " தன்னை வழிபடும் தன்னிகரில்லா முறை " - திருமூலர் 






    2வகை சிவ ஆலயங்கள்

           1.சரீர பிரஸ்தரம் 
                            தன் மனதுக்குள் கோவில்கட்டி பூஜை செய்வது சரீர பிரஸ்தரம் எனப்படும் . பூசல நாயர் , கைலாய நாதர்ருக்கு தன் மனதுக்குள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்

          2. இருதய பிரஸ்தரம்
                            இம்முறையில் அமைக்கப்பட்ட கோவில் சிதம்பரம் நடராஜன் 
                            கோவில்


        " உள்ளம் பெரும் கோவில் ஊன் உடம்பு ஆலையம் " - திருமந்திரம் 


 கோவிலை பிரதிஷ்டை செய்தவர்கள் அடிப்படையில் கோவிலின் வகைகள் :

1. தைவீகம்      -         தேவர்கள் கட்டியது 
2. மானுசம்       -           மனிதர்களால் கட்டப்பட்டது 
3. ஆஸுரம்       -         அசுரர்களால் கட்டப்பட்டது 
4. ஆர்சம்            -             ரிஷிகளால் கட்டப்பட்டது . 



விமானங்களின் அமைப்பு :
  
                   *    ஒருசுவர் கருவறை நிரந்தரா என அழைக்கப்படுகிறது 
                   *    இருசுவர் கருவறை சாந்தாரா என அழைக்கப்படுகிறது 

         =>    இருசுவர் கருவறை கொண்டு எழுப்பப்பட்ட விமானத்தினை கொண்ட 
                  கோவில் தஞ்சை பெரியகோவில் 

விமானங்களில் உறுப்புக்கள் -

                    *   உபபீடம் 
                    *   அதிட்டானம் 
                    *    பித்தி 
                    *    தேவகோட்டம் 
                    *    கர்ணகூடு 
                    *    கும்பபஞ்சரம் பிரஸ்தரம் 
                    *    கழுத்து அல்லது கண்டம் , 
                    *    சிகரம் , 
                    *    மகுடம் அல்லது இஸ்தூபி .

" சடங்க விமானம் " = 6 முக்கிய உறுப்புகளை கொண்ட விமானம்
                                 
                                 1.   அதிட்டானம் 
                                 2.    பித்தி 
                                 3.    பிரஸ்தரம் 
                                 4.    கண்டம்
                                 5.    சிகரம் 
                                 6.    இஸ்தூபி 



கோவிலின் வகைகள் :

1. பெருங்கோவில் : 
                       கோவிலுக்குண்டான அனைத்து பகுதிகளையும் கேட்டிருக்கும் 

2. கரக்கோவில் 
                         *  மரப்பலகை மற்றும் புல்கீற்றினால் வேயப்பட்டிருக்கும் 
                         *  சாலை ,அர்த்தசாலை ,மற்றும் கூடாரம் ஆகிய பகுதிகள் 
                              கொண்டது 
                         *   உதாரணம் தில்லை சிற்றம்பலம் 
                         *  கேரளாவில் பெரும்பாலான கோவில்கள் இவ்வகையை 
                              சார்ந்தது      
                          *  கடம்பூர் கோவில் இவ்வகையே 

3. ஞாழற்கோவில் 
                          *  மேடைக்கோவில் 
                          *  சிறுசிறு மரம் சேர்ந்து  கூடாரம்போல் அமைக்கப்பட்டிருப்பது 
                          *   1000 கால் மண்டபத்திற்கு முன்னோடி 

4 . கொகுடி கோவில் 
                        *  முல்லைக்கொடியால் சூழப்பட்ட கோவில் 

5. இளங்கோவின் 
                        *   பாலாலயம் என அழைக்கப்படுகிறது 
                        *   கர்ப்பகிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் 

6. மணிக்கோவில் 
                        *   வண்ணம் தீட்டிய சிற்பங்கள் கொண்டிருக்கும் 
                        *   திருமுறைக்கோவில் என அழைக்கப்படுகிறது 
                        *   பெரியகோவிலில் உருத்திராக்கம் போன்ற மணிகாலால் 
                             அமைக்கப்பட்டிருக்கும் சன்னதிகள் மணிக்கோவில் என்பர் 

7. ஆலக்கோவில் 
                         *   " ஆழம் " நீர்சூழ்ந்த இடம் 
                         *   நாலாபுறமும் நீர் சூழ்ந்திருக்கும் பகுதிக்குள் 
                               அமைக்கப்பட்டிருக்கும் 

8 . மாடக்கோவில் .
                         *   யானை ஏறமுடியாதவாறு படிகள் அமைந்திருக்கும் கோவில்  
                               மாடக்கோவில் 

9. தூங்கானை மாடக்கோவில் 
                         *  கஜபிருஷ்டம் போன்றது 
                         *   தூங்குகின்ற யானையின் அமைப்பை போன்று 
                             அமையப்பட்டிருக்கும் 
                         *   இவ்வாறு அமைக்கப்பட்ட கோவில் திருப்பேனாகரம் 

10. தாளக்கோவில் 
                         *   மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவில் 
                              தலைக்கோவில் எனப்படும் 



கோவில் சிற்பங்கள் :

           பஞ்சலோக சிலைகள் :
                       ( ஐந்து உலோகங்கள் )
                        1. தங்கம் 
                        2. வெள்ளி 
                        3. செம்பு 
                        4. துத்தம் 
                         5. ஈயம் 
                   ஆகிய ஐந்து உலோகங்களை கொண்டு செய்யப்பட்ட சிலை பஞ்சலோக சிலை என அழைக்காடுகிறது 

            =>சிற்பம் என்பது ஒரு முப்பரிமாண கலைப்பொருள் ஆகும் 

             
சிற்பங்கள் செய்ய பயன்படுத்த படும் பொருட்கள் 
                                      கற்கள் 
                                       உலோகங்கல் 
                                       மரம் 
                                       மண் 

சிற்பங்களை வடிப்பவனை சிற்பி என்பர் 



சிற்ப வகைகள் :

      1.  முழு உரு சிற்பம் : 
                       *  நாற்புறமும் பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருப்பது 

      2.  புடைப்பு சிற்பம் 
                         *   சுவரிலிருந்து புடைத்திருக்கும் 
                         *   ஒருபுறம் மட்டும் வடிக்கப்பட்டிருக்கும் . 
                              இது சுவர் , பறை , தூண் ஆகியவற்றில் வடித்திருப்பர் 

3. செதுக்கு சிற்பம் :
                         *  உலோகம் அல்லது பொருளை தேவையற்றதை நீக்கி 
                             வடித்திருப்பர் 

சிலை செய்யும் விதிமுறைகள் மற்றும் பஞ்சலோகம் பற்றி கூறப்பட்டுள்ள நூல்கள் 

              *   சில்பசாஸ்திரம் 
              *   மனசார 
              *   அபிலா சித்தார்த்த சிந்தாமணி 



      விக்ரகங்கள் : 
                   கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விக்ரகங்கள் எனப்படும் 


கோவில் குளங்கள் :

                *   மலை நீரை சேமிப்பதற்காக மன்னர்கள் கோவில் கட்டும்பொழுது
                     அருகில் குளங்களையும் தோன்றியுள்ளனர்
                *   இறைவன் நீட்டாடுவதற்காகவும் புண்ணிய தீர்த்தத்திற்காகவும்
                      குளங்கள் அமைக்கப்பட்டன
                 *   மிகப்பெரிய கோவில் குளங்கள் கும்பகோணம் கமலாலயம் ஆகும்
                      குளங்கள் ஈசானிய முலையில் அமைவது சிறப்பு
                 *   கோவில் பிரகாரத்தின் உள்ளேயும் வெளியேயும் அமைக்கலாம்
                  *  கோவிலின் வெளிப்புறத்தில் சற்று தள்ளி
                      அமைக்கப்பட்டிருப்பத்திற்கு உதாரணம் மதுரை மீனாட்ச்சி அம்மன்
                      கோவில் ஆகும்



ஸ்தல விருட்க்ஷம் :

               *   அரசமரம்
               *    வில்வமரம்
               *    ஆலமரம்
               *    வேப்பமரம்
                *    வாழைமரம்

                  =>   அரச மரம் தெய்வீக மரம் , போதிமரம் , அசுவதம் எனவும்
                          அழைக்கப்படுகிறது
                  =>    மரத்தில் வேர் பகுதி பிரம்ம
                  =>    மரத்தின் தண்டுப்பகுதி விஷ்ணு
                  =>    மரத்தின் கிளை பகுதி சிவன்

                   =>  வில்வமரம் லக்ஷ்மிமரம் எனவும் அழைக்கப்படுகிறது
                   =>   வேதகாலங்களின் வெப்பமரத்தினையே கடவுளாக வணங்கினர்

       ---------------------------------------------------------------------------


           இசை :

                  முத்தமிழ் = இயல் இசை , நாடகம்
                

        சங்கீத மும்மூர்த்திகள் 
                                      1. சியாமளா சாஸ்திரிகள் 
                                      2. தியாகராஜ சாஸ்திரிகள் 
                                      3. முத்துசாமி தீக்ஷிதர் 

இந்துஸ்தானி இசை என்பது பாரசீகமும் அரேபியமும் இசைந்து வருவது 

       ஏழிசை :
                 1.   குரல் 
                 2.   துத்தம் 
                 3.    கைக்கிளை 
                 4.    உழை 
                 5 .   இழி 
                 6.    விளரி 
                 7.    தாரம் 




            இசையின் ஆதாரங்கள் " சப்தசுரங்கள் " கர்நாடக இசை 

                      ஸ   -  ஷாட்ஜம் 
                       ரி   -   ரிஷபம் 
                       க   -   காந்தாரம் 
                       ம   -   மத்யமம் 
                        ப   -   பஞ்சமம் 
                        த   -   தைவதம் 
                       நி   -    நிஷாதம் 


             
    நாட்டியம் :

                           தமிழ்நாடு - பரதநாட்டியம் 
                          கேரளம் - கதகளி , மோஹினி ஆட்டம் 
                          ஆந்திர - குச்சிப்புடி 
                          மணிப்பூர் - மணிப்பூரி 
                          ஒரிசா - ஒடி சி 
                          உத்திரபிரதேசம் - கதக் 
                         அசாம் - சாற் றியம்


       படதநாட்டியும் பழைய பெயர் : சதிர் கச்சேரி 
                                                                        தாசியாட்டம் 
                                                                        சின்னமேளம் 

                                பா  - பாவம் 
                                 ர  -ராகம் 
                                 த தாளம் 

             பரத முனிவர் உலகிற்கு அருளியதால் இப்பெயர் பெற்றது என்பர் 


                       ----------------------------------------------------------------------------



          ஸ்தல புராணங்கள் :


தஞ்சை பெருவுடையார் கோவில் :

              *   1000 ஆண்டுகள் பழமையானது 
              *    இராஜராஜசோழனால் கட்டப்பட்டது 
              *   " தட்சிணமேரு " என அழைக்கப்படுகிறது
              *   கட்டிடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை ஆகிய மூன்று 
                   கலைகளும் ஒருங்கே அமைந்ததுள்ளது 
              *    UNESCO அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது 
              *   ASI பாதுகாப்பின் கீழ் உள்ளது . ( ASI - ARCHIYALOGICAL SERVEY OF 
                    INDIA ) மத்திய தொல்லியல் பாதுகாப்பு துறை 
              *   சதுர வடிவ கருவறை கொண்டது 
              *   216 அடி உயர விமானம் கொண்டது 
              *   சிகரம் திராவிட வகையை சார்ந்தது 
              *   கழுத்துப்பகுதி 20 மீட்டர் சதுர பரப்பு கொண்ட பிரம்மா மந்திர 
                    கல்லால் ஆனது 
               *   சிகரம் ஆரஞ்சு பலம் போன்று 8 கற்கள் இணைந்தது , ஒரு கல் 
                      ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்டது . 

              *  கருவறை சாந்தாரா வகை சுவர்களை கொண்டுள்ளது 


               -----------------------------------------------------------------------------------


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் :

              *  2000 ஆண்டுகள் கொண்ட மிக பழமையான கோவில் 
              *  கி . பி . 7ம் நூற்றாண்டு திருஞானசம்மந்தரால் பதிகம் 
                  பாடப்பட்டபொழுது அங்கு இருந்தது சிவபெருமான் மட்டுமே. 
                  கற்கோவிலாக இல்லை . மடதளியாக மட்டுமே சிவபெருமான் 
                   இருந்தார் 

             *   முற்கால பாண்டியர்கள் சிறிய அளவிலான கோவிலை காட்டினார் , 
                  பிற்கால பாண்டியர்கள் பெரிய அளவிலான கோவிலை காட்டினார் 
             *   கி.பி.12ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் மீனாக்ஷிக்கு பெரிய அளவில் 
                   தனி கோவிலை அமைத்தார் 


மாலிக்கபூர் படையெடுப்பு :

        டெல்லியை ஆட்சிபுரிந்த அலாவுதீனின் படைத்தளபதியாக மாலிக்கபூர் கி.பி.1413 ம் நூற்றாண்டு படையெடுத்துவந்து மதுரை மீனாட்சி கோவிலை தாக்கினர் . 
அதில் தப்பியவை : சுந்திரபாண்டியன் கோபுரமும் ( கிழக்கு கோபுரம் )
                                        பராக்கிரம பாண்டிய கோபுரம் ( மேற்கு கோபுரம் )

தற்போதைய கட்டிடங்கள் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது ( கி.பி. 16 - 17 )

மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளது . 



இரசித்த சபை / வெள்ளியம்பலம் : 

              வலக்காலை தூக்கி இடக்காலை ஊன்றி இருப்பதற்கு மாறாக இடக்காலை தூங்கி வலக்காலை ஊன்றிய வண்ணம் இங்கு நடராஜர் கட்சி அளிக்கிறார் .



திருவிழா வீதிகள் : ஆடிவீதி 
                                         ஆவணிவீதி 
                                         மாசிவீதி 
                                          சித்திரை வீதி 

                           

                         ----------------------------------------------------------------------------


ஸ்ரீ ரங்கம் : 

            *   108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது 
            *   " பூலோக வைகுண்டம் " என அழைக்கப்படுகிறது 
            *   10 ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலம் இது 
            *   வைகுண்டத்தில் இருக்கக்கூடிய விரஜா நதிக்கு இணையாக இங்கு 
                  ஓடும் காவிரி கருதப்படுகிறது 

             *   ஏழு திருசுற்றுகள் கொண்டுள்ளது 
             *   18 புராணங்களும் ஒன்றான பிரும்மாண்ட புராணத்தில் ஸ்ரீரங்கா 
                  மஹாத்திமம் சொல்லப்பட்டுள்ளது 
             *   இக்கோவில் இஷ்வாகு மன்னரால் முதன்முதலில் கட்டப்பட்டது 
             *   தொண்டரடிபொடியாழ்வார் இக்கோவிலில் நந்தவன கைங்கர்யம் 
                   செய்துவந்தார் 

             *    ஸ்ரீமந்நாதமுனிகளால் அரையர் சேவை அரண்பிக்கப்பட்டு 
                 இன்றுவரை நடந்து வருகிறது . 


அரையரசேவை : 
         திவ்ய பிரபந்தங்களை ராகாதலங்களோடு பாடும் சேவை 

தெற்கு ராய கோபுரம் :

     *    400 ஆண்டுகளுக்கு முன்பு முற்று பெறாத தெற்கு ராய கோபுரத்தை 
            காட்டினார் 
      *    44வது பட்டம் ஸ்ரீமர் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் 23 அடி உயரத்தில் 
            இக்கோபுரத்தை கட்டிமுடித்தார் .


                        ----------------------------------------------------------------------


சிதம்பரம்  நடராஜ பெருமான் :
               

 இருதய பிரஸ்தர கோவில் 
               பிரகாரம்        :    உடல் 
              கனக சபை     :   இதயம் 



கனகசபை

            *   நேரடியாக நுழைவாயில் கிடையாது
            *   வலது & இடப்புறம் வாயில் உள்ளது 
            *   ஐந்து படிக்கட்டுகள் = பஞ்சராத்திர மந்திரத்தை குறிக்கிறது 
                  சதுர வடிவ ஜன்னல் துளை : 96 தத்துவங்களை குறிக்கிறது 
             
                 தூண்கள் :  
                      4 தூண்    =   4 வேதங்கள் 
                      6 தூண்    =   6 தர்சனங்கள் 
                      18 தூண்  =   18 புராணங்கள் 
                      26 தூண்  =    26 சிவாகமங்கள் 

21000 தங்கத்தகடு கூரை - ஒரு நாளில் மனிதனின் சுவாசத்தை குறிக்கும் 
அதில் வேயப்பட்ட 72000 ஆணி - மனித உடம்பில் உள்ள நாடிகள் 

விமானத்தின் மேல் உள்ள 
                                        9 கலசம்       =      நவசக்திகள்
                                            5 பீடம்       =       முமூர்த்திகள் , 
                                                                          சதாசிவம் 
                                                                          மற்றும் மஹேஸ்வரம்

                   1000 கால் மண்டபம்       =       மனித மூளையின் 1000 மடிப்புகள் 
   கனகசபையின் வெற்றிடம்        =       அரூவ கடவுளை குறிக்கும் 

               நடராஜர் சிலை - 5 தொழிலை குறிக்கும் 
                                                உடுக்கை                =>     படைத்தல் 
                   கையில் தங்கியுள்ள நெருப்பு    =>     அழித்தல் 
                                                    அபயகரம்           =>     காத்தல் 
                                                     முயலகன்         =>      தான் எனும் அகங்காரத்தை 
                                                                                                அளித்தால் 


                                  உயரே தூக்கிய கால்          =>     சரணாகதி 
                                                            கண்கள்          =>     சூரியன் சந்திரன்



                  =========================================================

No comments:

Post a Comment