Sunday, 9 September 2018

1. MEANING & DEFINITION OF RELIGION





   இந்து / ஹிந்து    =  (   ஹிம் + து  )  ஹிம்சையில் துய்க்கின்றவன் என்று பொருள் .

         " பிறர் துன்பங்களை தன் துன்பமாக கருதி அதற்காக வருந்தி      
                அத்துன்பத்தை அகற்ற முற்படுபவன் இந்து .
                இப்பண்பை   கொண்ட மக்கள் உள்ள மதம் இந்து மதம் " என்றும் சொல்லப்படுகிறது

  இது ஆதிகாலம்தொட்டு " சனாதனதர்மம் "    என்றும் அழைக்கப்படுகிறது
     
  இந்து மதம் இன்னும் பல பெயர் வைத்து அழைக்கப்பட்டது பிற பெயர்கள்
                                             "    அறிவில்லா அறம்
                                                    திருநெறி 
                                                    தவநெறி
                                                    அருள்நெறி
                                                    சன்மார்க்கம்    "

    இந்து மதம் சிந்துவெளியில் தோன்றிய மதம் .    இந்து என்ற சொல் சிந்து என்ற சமஸ்க்ரித சொல்லிலிருந்து பாரசீகழிமூலம் பிறந்தது.

    *    சிந்து நதியின் கிழக்கில் வசித்தவர்கள் சித்துக்கள் என அழைக்கப்பட்டனர் .

    *     சித்துக்களை பாரசீகர்கள் ஹிந்துக்கள் என்று அழைத்தனர் .
         
    *     13-ம் நூற்றாண்டில் (ஹி) இந்துக்கள் என அழைக்கும் முறை உருவானது .
           


"  மனிதன் எப்பொழுது சிந்திக்க தொடங்கினானோ அப்போதே இந்துமதம் தோன்றியது .


=     " இந்து சமயத்தை யாரும் தோற்றுவிக்கவில்லை .






2. HINDU SCRIPTURES




இந்து மதத்தின் முக்கிய நூல்கள் :

*   வேதங்கள்
*   ஆகமங்கள்
*   இதிகாசங்கள்
*  புராணங்கள்
*   சாத்திரங்கள்
*   தோத்திரங்கள்


வேதங்கள் :-

வேதம்  =  " புனித அறிவு " என்று பொருள்    *    " வித் " இதன் வேர்ச்சொல் ( சமஸ்க்ரித சொல் )
                                                
* தெய்வீக கருத்துக்கள் மறைந்து வருவதால் மறை அழைக்கப்படுகிறது .
   

வேதங்கள்  = மொத்தம் நான்கு
                                                                 
              1 . ரிக்
              2 . யஜுர்
              3 . சாமம்
              4 . அதர்வணம்


1. ரிக் :-

* " வழிபடுதல் / துதித்தல் " என்று            பொருள்.
* மிக பழமையானது.
*  பிராத்தனை வடிவம்,  செயுள்வடிவம் கொண்டது.
*  2029 பாடல்களை கொண்டது.
* 10 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது 
* முதல் ஏழு மண்டலங்கள் பாடப்பட்டுள்ள கடவுள் :   அக்னீ
 * 10 வது மண்டலம் :  பிரம்ம , இந்திரன் 



2.யஜுர் :-

* " யாகம் " என பொருள்படும்
*  வசன வடிவம் கொண்டது.
*  சடங்குகள் & யாகங்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டது.
* யாகம் , பலி , தானம் , கிரியை ஆகியவைகளை கூறுகிறது 
* அம்மாவாசை , பௌர்ணமி காலங்களில் மேற்கொள்ளும்வேள்விகள் பற்றி முக்கியத்துவம் விளக்குகிறது 
 *  பிதுர்கர்மா பற்றி  சொல்லப்பட்டுள்ளது 
* சிறப்பு : ருத்ரம் பற்றிய குறிப்பு உள்ளது 

  
3. சாமம் :-

*  " இன்னிசை "
* இசை வடிவம் கொண்டது .
* இறைவனுக்கான துதி.
 ( வத்தகரால் பாடப்பட்டது என்பர் )
* பரமேஸ்வரன் , அக்னீ , இந்திரன் ஆகிய கடவுள்கள் வழிபாடு பற்றி கூறுகிறது
* பாவங்களை  நீக்க பாடல்கள் உள்ளது 
* இசையுடன் படுவதால் பாவங்கள் குறைகிறது


4 . அதர்வணம் :-                                               

பில்லி & சூனியங்களுக்கான மந்திரகட்டு  
* " பிரம்ம வேதம் " என்றும் அழைக்கப்படுகிறது .
*  விரோதிகள் அழிய மந்திரங்கள் இதில் உள்ளது                                         
*  மந்திரங்கள் எவ்வாறு உச்சரிப்பது என இதில் சொல்லப்பட்டுள்ளது 


   

வேத இலக்கியங்கள் நான்கு  :
                        
  1 . சம்ஹிதை  :-
  2. பிராமணங்கள் :-
  3 . ஆரணியங்கள்  :-
  4 . உபநிடதங்கள் :-



1 . சம்ஹிதை  :-

 * துதிப்பாடல்கள் கொண்டது.
 * வழிபட்டு முறைகளுக்கானது.
 * வேள்விகளுக்கான சூத்திரங்களை கொண்டது.

 
 2. பிராமணங்கள் :-
   
* வேத மந்திரங்களுக்கான விளக்கவுரை( உரைநடை நூல் )
* பிரமணர்களுக்கான வழிகாட்டி

 
3 . ஆரணியங்கள்  :-

* " காட்டு இலக்கியங்கள் " என்ற பெயரும் உண்டு.
*   இது பிராமணர்களின் இறுதி பகுதி .
*  துறவுவேண்டி செல்பவர்கள் காட்டில் கற்கவேண்டியது பற்றி கூறுகிறது.                                                            
*   தியானமே சிறந்தது என கூறுகிறது.

 
  4 . உபநிடதங்கள் ( உபநிஷத் ) :-

 * " ஈடுபாட்டோடு அருகில் அமர்ந்து கற்றுக்கொள்ள"  
       ( உப + நிசத் = அருகில் + அமர்தல் )
 *  வேதங்களின் இறுதி பகுதி.
 *  பிற பெயர்கள் :
       வேதாந்தம் (வேதத்தின் இறுதி பகுதி )
       உத்திர மீமாம்சை ( வேதத்தின் இறுதிபகுதியை ஆராய்ச்சி செய்வதினால்)
 * வேதங்களின் சாரமே உபநிஷத் 
 * மொத்தம்  108 உபநிடதங்கள்.
 * 10 உபநிடதங்கள் சிறந்தவை.
              ஈஷம்,
               கேனம்,
               கடம் ,
              பிரசனம்,
              முண்டகம்,
              மாண்டூக்கியம்,
             ஐதரேயம்.
            தைத்திரீயம்,
           பிரகாதாரண்யம்,
           சாந்தோக்கியம்.                   
                                                            
               
 *  " தத்வமஸி "(நானே அது) => சாந்தோக்ய உபநிஷத்
 * "சத்யமேவ ஜெயதே " => முண்டக உபநிஷத்
 * " எழுமின் விழிமின் உழைமின் " => கடோபநிஷத்
                                   
  " சத் சித் ஆனந்தம் "
        சத் = உள்பொருள்
        சித் = அறிவு / உணர்வு
        ஆனந்தம் = இன்பமயமான                                                 
   
                                    ----------------------------------------------------------------------------------


          ஆகமங்கள்   :- 
                 ஆ + கமம் =  ஆ      - ஆன்மாக்கள்
                          கமம் - பாசங்களை நீக்கி முக்தி அருள்வது.
                        
    இரண்டு ஆகமங்கள்  :    1. சிவாகமங்கள                                                                                    2. வைணவகங்கள்
 

  1. சிவாகமங்கள்   =>   * மொத்தம் 28
   * நந்தியால் அருளப்பட்டது.
   * சிவனின் ஐந்து முகத்திலிருந்து தோன்றியது.
   * " சிவாகமம் என்பது உயிர்களிடத்தில் சிவபண்பை நிறைய செய்யும் கருவி "

               
      சிவனின் ஐந்து முகம் :

             
     1. சத்யோசாதம்
     2. வாமதேவம்
     3. அகோரம்      
     4. தத்புருஷம் 
     5. ஈசானம்       


                       
     1. சத்யோசாதம் = காமிகம், யோகஜம், சிந்தியம், கரணம்,அஜிதம்.
     2. வாமதேவம் = தீப்தம், குக்சம், சஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம்.
     3. அகோரம்       = விஜயம், நிச்சுவாசம், சுயம்புவம், ;அனலம், வீரம்.
     4. தத்புருஷம்   = ரவ்வம், விமலா பிம்பம், சந்திரஞான, மகுடம்.
     5. ஈசானம்         =  புரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம்,
                                                           சார்லுவாக்தம், பரவேஸ்வரம், கிரணம், வாதுளம்.


      பத்து ஆகமங்கள் - சிவபேதம்
    பதினெட்டு ஆகமங்கள் - ருத்ர பேதங்கள்

               
   * தசா காரியங்கள் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது
                       
       1. தத்துவ ரூபம்
       2. தத்துவ தரிசனம் ,
       3 . தத்துவ சுத்தி
       4. ஆத்ம ரூபம்
       5. ஆத்ம தரிசனம்
       6. ஆத்ம சுத்தி
       7. சிவ ரூபம்
       8. சிவ தரிசனம்
       9. சிவ யோகம்
      10. சிவ போகம்             
                          

   
ஆகமங்கள் கூறும் நான்கு பாதங்கள் :

 1. சரியா பாதம்  =>   * பூஜைக்குரிய பொருட்களை சேகரித்தல்.                                                                            * பூஜை முறைகள்
 2. கிரியா  பாதம் =>  * கரிசனம்( உழுதல் to ) முதல் பிரதிஷ்டை வரை உள்ள 
                                            கிரியைகள்
                                          *  நித்திய நைமித்திக பூஜைகள்.
                                          *  திருவிழா முறைகள்
                                          *  சமய விஷேச ஆன்மநிர்வாணா முறைகள்
                                          * யாகங்கள் பற்றி  கூறுகிறது.
 3. யோகா பாதம்  =>  * ஆன்ம சுத்தி.
                                          * அந்தர் யாகம்.

  4.  ஞான பாதம்    =>     பதி பசு பாசம் ஆகியவைகளுக்கான விளக்கம்.



          
  2 வைணவாகமம் :-

   * ஸ்ரீமன் நாராயணனை பர தேவதையாக கூறும் ஆகமம்
           
 இரண்டு வகை : 
     1. பஞ்சராத்காரம் ( பல ரிஷிகளால் கூறப்பட்டது )                                      
     2. வைகானசாகமாம் ( விகர்சன மகரிஷி மூலம் கற்பிக்கப்பட்டது )

    பஞ்சராத்கார முறை பூஜை நடைபெறும் இடங்கள் - ஸ்ரீ ரங்கம்
                                                                                                            - காஞ்சிபுரம்
                                                                                                              - திருநாராயணபுரம்
   வைகானசாகமாம்முறைப்படி பூஜை       - திருப்பதி

 இவாகமத்தில் விளக்கப்பட்டுள்ள 5 பாகங்கள் :
                  1. பஞ்ச பூதங்கள்
                  2. பஞ்ச தன்மாத்திரை
                  3. அஹங்காரம்
                 4. புத்தி
                 5. அவ்வியக்தம்
 

 மேலும்  -    விக்ரக பிரதிஷ்டா கிரமங்கள்
  -    பூஜா காலங்கள்
  -    பூஜா திரவியங்கள்
  -    உத்ஸவாதிகள்
  -    சாம்பாரோசனாதிகள்

                     மந்திர தந்திரங்கள் ( முத்திரை ) - அவரை , நைமித்திக , பூஜைகளும்
                         
                        
                                             --------------------------------------------------------------------------------------
                                                                                                                                          


  இதிகாசங்கள்  :- 

 " இவ்வாறு நடந்தது. " என பொருள் படும்  
( இதி + காசம் = இவ்வாறாக எழுதப்பட்டது)
                                         
  மொத்தம் இரண்டு  :    1. ராமாயணம்
                                               2. மஹாபாரதம்
         
                                  
1 . ராமாயணம்   :-
  இராம + அயனம் ( பயணம் )
  
=> காலம் : கி.மு 5 to 2  ( திரேதாயுகம் )
     இயற்றியவர் : வால்மீகி.
    ( தமிழி : கம்பராமாயணம் )

  =>   24,000 சுலோகங்கள் கொண்டது .
 =>       மொத்த காண்டங்கள் ஏழு :
          1. பால கண்டம்            ( பிறப்பு, கல்வி, திருமணம்)
          2. அயோத் திகண்டம்  ( திருமணத்திற்கு பின்அயோத்தியில் வாழ்ந்தது)
          3. ஆரண்ய காண்டம்          ( காட்டில் வாழ்ந்தது )
          4. கிஷ்கிந்தா காண்டம்     (வானர நாட்டில் சீதையை தேடி சென்றது )
          5. சுந்தர காண்டம்          ( இலங்கையில் அனுமன் சீதையை காண்பது )
         6. யுத்த காண்டம்      
         7. உத்ர காண்டம்

  =>   ராமனின்  தாய்    -  கௌசல்யா
                         தந்தை    -  தசரதன்
                      மனைவி   -  சீதா தேவி
                               குரு   -  வசிஷ்டர்
                                   
 =>      ராமனின் சகோதரர்கள் :
           இலட்சுமணன்  -    சுமித்திரை மகன்
           சத்ருகன்            -    சுமித்திரை மகன்
        பரதன்                  -     கைகேயி மகன்( பரத  நாட்டை ஆண்டவன் )                          

=>       ராமனின் நண்பர்கள் :
             குகன்      ( புக காட்டை ஆண்டவன் )
              ஜடாயு      (கழுகு அரசன் )
         சுக்ரீவன்  ( வானர தலைவன்/வாலியின் தம்பி)
      விபீஷணன் ( ராவணனின் தம்பி )
                                  
=> 14 வருட வனவாசம் சென்றவர்கள்  :  ராமன் 
                                                                      இலட்சுமணன்
                                                                                  சீதை                         
=> இலங்கையில் சீதையின் பணிவிடை செய்தவள் திரிசடை( விபீஷணனின் மகள் )
                    
=>  அனுமன் பிற பெயர்கள் :
     சொல்லின் செல்வன்
     வாயு புத்திரன்
                                                                                                   

  =>        ராமனின் சிறப்பு பெயர் : சக்ரவர்த்தி திருமகன்
                                                                                                                         
  =>  மாயமான் :  மரீசனை
  => இலங்கை அரசன் : இராவணன்
   => இராவணனின் மனைவி -   மண்டோதரி
                                      தங்கை    -   சூர்ப்பநகை
                                       மகன்       -   இந்திரஜித்
        தம்பிகள்  -   கரனன், கும்பகர்ணன், விகர்ணன் , விபீஷணன்

  =>     கம்பராமாயணம் சொல்லும் உண்மை :
           1.  உரைசால் பத்தினியை உயர்ந்தோர் எதுவர்.
           2 .ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
           3.  முடி வேந்தனும் பிடி சாம்பலே.          

                                  

   => ராமாயணத்தை இயற்றியவர்
                     
              வடமொழியில் -  வாலமீகி
                 தமிழில்         -   கம்பர்
              ஹிந்தி           -   துளசிதாசர்
         மலையாளம்      -  எழுத்தச்சன்
        அசாம்      -   மாதவ் கங்குணி
         ஒரிய        -   பலராம்தாஸ்

                                  ---------------------------------------------------------------------------------------


 
2 . மஹாபாரதம் :- 
                               
=>      காலம்              : துவாபரயுகம்
        இயற்றியவர்   : வேத வியாசர்
          (வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார்)
=>    சம்ஸ்கிருத நூல் 
=>    18 பருவங்கள்  கொண்டது.
=>     விளக்குவது :   அறம்,
                                      பொருள்
                                         இன்பம்
                                      வீடுபேறு                            
                  
=>    74000 மொத்தப்பாடல்கள்
 =>   பாண்டு, திருதிராஷ்டரரின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட போர் 
 =>     பஞ்ச பாண்டவர்கள் vs  கௌரவர்கள்
       
பஞ்ச பாண்டவர்கள் = 
       தர்மன்
        பீஷ்மன்
        அர்ஜுனன்
        நகுலன்
        சகாதேவன்

  கௌவரவர்கள்  = 
         காந்தாரியின்  நூறு மகன்கள்
         ( துரியோதனன் துச்சாதனன், யுயுச்சு ... )
            கர்ணன் 
           சகுனி ( காந்தாரியின் அண்ணன் )
         பீஷ்மர் ( படை தளபதி )

   
=>குந்தியின் புதல்வர்கள்  - 
                 கர்ணன் ( சூரியபுத்திரன்/வசுசேனன் )
                தர்மன் ( தர்ம தேவதை )
                 பீமன் ( வாயு புத்ரன் )
               அர்ஜுனன் ( இந்திரன் )
 => மைத்திரியின் புதல்வர்கள் - நகுலன், சகாதேவன் (அஷ்வினி தேவதைகள் )
                                                                                            
 =>   பாண்டவர்களின் மனைவி -: பாஞ்சாலி ( திரௌவ்பதி )
 =>   பாண்டவர்களின் குரு : துரோணாச்சார்யார்
 =>   கர்ணனின் குரு : பரசுராமன்
=>   அர்ஜுனனின் பிற பெயர்கள் :
                     பார்த்தான்
                     காண்டீபன்
                 வில்லுக்கு விஜயன் 
=> அர்ஜுனன் மனைவி : சுபத்திரை
                  மகன்        : அபிமன்யு
                
=>  அபிமன்யு மனைவி : உத்திரை
                                  மகன்  : பரிசித்து

  => போருக்குப்பின்  நாட்டினை ஆண்டவன் பரிசித்து
  
  =>  வால்மீகி திருடனாக இருந்தவர்
                  இயற்பெராயர் : ரத்னாகரன் 
 => குருசேத்திர போர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமானது
                        

   =>  கலியுகம் 4,32,000 ஆண்டுகள்
                      

   
  பகவத்கீதை :

  *  கண்ணனால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது
  *    பீஷ்ம பருவத்தில் வருகிறது -6 வது பருவம் .
           (6 வது பருவம்- 16 அதிகாரங்களை கொண்டது )
           
  *    18 அத்தியாயங்களை கொண்டது( 18 நாள் குருசேத்திர போர் )
  *   700 சுலோகங்களை கொண்டது
                                                                                             
* கூறுவது :  =>    நான்கு தர்மங்கள்
                         1.  ஞான யோகம்
                         2.   கர்மம் யோகம்
                         3.    பக்தி யோகம்
                         4.    யோகம் மார்க்கம் / ராஜயோகம்

   =>    கர்மத்தின் மூலம் இறைவனை சரணாகதி  அடையலாம்.

  =>   நிஷ்காமிய கர்மம் - " பலனை எதிர்பார்க்காமல்தன் கடமையை செய்வது.

=>     " முக்திக்கு கர்மமே சிறந்தது " என்கிறது
                                                       
=>     போதனைகள்   :    மூலதத்துவம்=  சமயம், அறநெறி 
=>     நாம் புரியும் கடமையில் உள்ள பலனை துறப்பதே உண்மையான துறவு "
                                                        
                                

தமிழில் மஹாபாரதம் :
     பாரதியார் - பாஞ்சாலி சபதம்
     இராஜாஜி  - வியாசர் விருந்து
     வில்லிபுத்தூரார் .

                                               ----------------------------------------------------------------------------------------


  புராணங்கள் :- 

  * 5ம்  வேதம் என அழைக்கப்படுகிறது
  *  18 புராணங்கள்  & 18 உபபுராணங்கள்

   
பதினெட்டு புராணங்கள் :-
                     
மஹாபுராணங்கள் எனவும் அழைக்கப்டுகித்தது
*  சிவன், விஷ்ணு, பிரம்ம ஆகிய மூர்த்தி பற்றியது
  
*  சிவபுராணம் 10
   1. சிவபுராணம்/ வாயு புராணம்
   2. பஹிஷ்ய புராணம்
   3. மார்க்கண்டேய புராணம்
   4. லிங்க புராணம்
   5. வரகபுராணம்
   6. மத்தய புராணம்
   7. கூர்ம புராணம்
   8. பிரும்மாண்ட புராணம்
   9. வாயுபுராணம் 
   10. மச்ச புராணம்


*  விஸ்ணு புராணம் 4

   1. விஷ்ணு புராணம்  ( வைணவம் )
   2. பாகவத புராணம்  ( பாகவதம் )
   3. நாரத புராணம்   ( நாரதீயம் )
   4. கருட புராணம்   ( காருடம் )


 * பிரம்மா புராணம் 2

    1. பிரம்ம புராணம் ( பிரமம் )
    2. பத்ம புராணம் ( புதுமம் )


  * அக்கினி புராணம் 1.

       * ஆக்னேயம் எனப்படும் .
       * சூரியனின் பெருமை கூறுவது.
       * பிரமை வர்த்த புராணம் எனவும் அழைக்கப்படுகிறது.




  பிரம்மா புராணம் =>   
*  ஆதி புராணம் என்ற பெயரும் உண்டு.
*  கிருஷ்ணன் பற்றிய கதைகள் அதிகம் வருகிறது.
*  திருமால் வழிபாட்டின் சிறப்பை பற்றி கூறுகிறது.

  பத்ம புராணம்      =>   
*  கற்பனை கதைகள் அதிகம்.
*  சகுந்தலை, ராமர், கதைகள் வருகிறது.

  விஷ்ணு புராணம்  =>  
*   திருமாலின் புகழ் பாடும் புராணம்.
*   புராணத்திற்க்கான அனைத்து இலக்கணமும்கொண்ட ஒரே புராணம்.
*  வாசுகி, பாற்கடல், மேருமலை, & கலியுகம்பற்றிய முன்குறிப்பும் உள்ளது

  பாகவதம்         =>   
*  கிருஷ்ணனின் வாழ்கை வரலாறு பற்றியது.
*   வைணவம் தோன்ற காரணமானது.
*   புத்தர் திருமாலின் அவதாரம் என்று கூறுகிறது.

நாரதபுராணம் &கருடபுராணம்   =>   திருமால் வழிபாடு பற்றி கூறுகிறது.


மார்க்கண்டேய புராணம்  =>  

* அக்கினி, சூரியன், இந்திரன்,&
*  சூரியனை வணக்கம் முறை
*  பிராமண சடங்கு
*  நான்கு  ஜாதிகளை மக்கள் பின்பற்றுதல் ஆகியபவை பற்றி கூறுகிறது.
 
மச்ச புராணம்     =>  
*  மனு & மீனுக்குமான உரையாடல் பற்றியது.
*  புனித தளம் , பண்டிகை, சடங்கு .
                                      
வாமன புராணம்   =>   
*  லிங்க வழிபாட்டின் சிறப்பு பற்றி கூறுகிறது.
*  சிவன், பார்வதி, முருகன், விநாயகர் பற்றிய கதைகள்
  
 அக்கினி புராணம்  =>  
* லிங்க வழிபாடு
* துர்க்கை வழிபாடு
* அரசியல் , சட்டம் , மருத்துவம், வானவியல்,சோதிடம்  
*  திருமணங்கள் & இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை

 லிங்க புராணம்   =>  சிவனை லிங்க வடிவில் வணங்கும் முறை

  கந்தபுராணம்        =>   சிவ பெருமை & வாரணாசி புகழ்


  உபபுராணங்கள் 18  =>

  முக்கியமானது  - விஷ்ணுதர்
                                    - மோத்தரம்
                           - கிருகத்தரும் புராணம்
                            - கல்கி புராணம்

  கல்கி புராணம்   - கலியுக இறுதியில் திருமால் ஆற்றஇருக்கும் பணிகள்.


    
                                              ----------------------------------------------------------------------------------------------


    சாத்திரங்கள்  :-
                               
 *  பதினான்கு சாத்திரங்கள்
 *  மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகிறது

  1. திருவுந்தியார் -   

     *  திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்  
     *   கி . பி .1147
     *   45 கலித்தொகை
     *   4 திறன் பற்றி கூறுகிறது
      ( கேட்டல், சிந்தித்தால் , தெளித்தால், நிஷ்டை ) 

2. திருக்களிற்று பாடியர் 
   *   திருக்கடவூர்உய்யவந்த தேவநாயனார்
   *  திருவுந்தியாரின் வழிநூல்
   *  100 வெண்பா
   *  பெயர்க்காரணம் : சிதம்பரம் திருக்களிற்று படியின்மேல் வைத்ததால்
                             
3. சிவஞானபோதம்       
   *  மெய்கண்ட தேவநாயனார்
   *  12 சூக்தங்கள் கொண்டது
   
4. சிவஞான சிந்தியர்    
    * அருணந்தி சிவாச்சரியார்  இயற்றினார்
    *   301 திருவிருத்தம்
     *   சிவஞானபோதத்தின் வழிநூல்
      இரு பெரும் பிரிவுகள் 1. பரப்பாக்கம் 2. சுபக்கம்

5 . இருபா இருபஃது       
     *   அருணந்தி சிவச்சரியர்    
     *   மெய்கண்டாரை துதிக்கும் வகையில் உள்ளது
     
6 . உண்மை விளக்கம்  
   *   திருவதிகை மணவாசகம் கடந்தார்
   *   3 வெண்பா
        விளங்குபவை :   36 தத்துவம் , ஆணவம் ,
                                        இருவினை ,
                                இறைவன் திருநடனம்
                                 , ஐந்தெழுத்தருள்நிலை ,
                       பதிமுதுநிலை , அனைத்தோர்த்தன்மை  

7. சிவப்பிரகாசம்------------------------  உமாபதி சிவாச்சரியர்
8. திருவருட்பயன் ---------------------- உமாபதி சிவாச்சரியர்
   ( திருக்குறளுக்கு இணையானது)

  9.வினாவெண்பா ------------ ----------  உமாபதி சிவாச்சரியர்
  10. போற்றிப் பட்ரோடை ------- ---   உமாபதி சிவாச்சரியர்                  
  11. உண்மைநெறி விளக்கம் ------   உமாபதி சிவாச்சரியர்
         (  தசகாரியங்களை விளக்குகிறது  )

  12. கொடிக்கவி ------------------------- -- உமாபதி சிவாச்சரியர்
  13. நெஞ்சுவிடுதூது --------------------  உமாபதி சிவாச்சரியர்
  14. சங்கற்ப நிகாரணம் ----------------  உமாபதி சிவாச்சரியர்



சிவஞானபோதம் :

  * 12 சூக்தங்கள் கொண்டது
  * முதல் சூக்தம் - பதி விளக்கும் உண்மை பற்றி கூறுகிறது
  * 2ம் சூக்தம் -பதியின் பொது இலக்கணம் மற்றும் பாசத்தின்
     உண்மையை விளக்குகிறது
  * 3ம் சூக்தம் - பசுவின் உண்மை பற்றி விளக்குகிறது
  * 4ம் சூக்தம் - பசுவின் பொது இலக்கணம் மற்றும் பாசத்தின் பொது இலக்கணம்
 *  7ம் சூக்தம் - பசுவின் சிறப்பு  இலக்கணம்
 *  8ம் சூக்தம் - ஞானத்தை உணரும் முறை
 * 9ம் சூக்தம் - ஆன்ம சுத்தி
 * 10 - பசு நீக்கம்
 * 11- சிவப்பேற்றினை
 * 12 -  அனத்தோர் தன்மை ( இறைவனை அடைந்தவர் தன்மை )


திருவருட்பயன் : 
 
  => வெண்பாக்களினால் ஆனது
 => திருக்குறள் போன்றது
 => 10 அதிகாரங்களை கொண்டது
=> 1 அதிகாரத்திற்கு 10 குரல்
 => 100 குரல் + காப்புச்செயுள் = 101

  நோக்கம் : இறைவனின் எண்குணம் , ஐந்தொழில் , உயிர்களின்
            மூவகை , உயிர்நிலை , இருமலநிலை விளக்குகிறது
  
 => 14 சாத்திரங்களில் 8வது

 10 அதிகாரங்கள் = 
     1. பதிமுதுநிலை
     2. உயிரவை நிலை
     3. இருள்மல நிலை
     4. அருளதுநிலை
     5. அருளறுநிலை
     6. அறியும் நெறி
     7. உயிர்விளக்கம்
    8. இன்புறுநிலை
    9. ஐந்தெழுத்து நிலை
   10 . அணைந்தோர் தன்மை

உண்மை விளக்கம் :

  =>  " மெய்கண்ட சந்தான அனுபவ திரட்டு " என சிறப்பிக்கப்படுகிறது
  =>  சைவ சாத்திரங்களை கற்க விரும்புவோருக்கு இதுவே வழிகாட்டி


               -----------------------------------------------------------------------------------------------------


   தோத்திரங்கள்  
    *   பன்னிரு திருமுறைகள் &
    *   நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள்


  பன்னிரு திருமுறைகள் :-

  *   சைவ சமயச்சார்யர்களால் பாடப்பட்டது.
  *   தொகுத்தவர் : நம்பியாண்டார் நம்பி
  *   10-ம் நூற்றாண்டு
   முதல் ஏழுதிருமுறைகள்  - தேவார பாடல்கள் என அழைக்கப்படுகிறது


 1, 2, 3 ம் திருமுறைகள் =>

     *  தேவார பாடல்களுள் முதன்மையானது
     *  திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது.
     *   திருக்கடை காப்பு  &  சீர்காழி பதிகம் எனவும் அழைக்கப்படுகிறது
     * " தோடுடைய செவியன் " என தொடங்குகிறது    
     *    384 பதிகங்கள் 
                                              


  4, 5, 6 ம் திருமுறைகள்  =>
                                 
    *   திருநாவுக்கரசரால் பாடப்பட்டது.
    *  " கூற்றாய நூறு விளக்களீர் ..." என தொடங்குகிறது

  7,ம் திருமுறை        =>  
           *  சுந்தரரால் பாடப்பட்டது
           *  " பித்த பிறைசூடி பெருமானே ..." ஆரம்ப வரி

 8 ம் திருமுறை  =>  
        *   திருவாசகம்.
        *   மாணிக்கவாசகரால் பாடப்பட்டது
        *   திருக்கோவையார் & 8ம் வேதம் எனவும் அழைக்கப்படுகிறது
        *  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் : ஜி.யூ. போப்  
        *  " மென்தானா நம்பி விதிர் விந்துதல் ...." தொடக்கவரி

 
 9 ம் திருமுறை =>
     *  9 நபர்களால் பாடப்பட்டது
     *  ஒன்பதின்மர் =  
                1. திருமாளிகை தேவர்
                2. சேந்தனார்
                3. கருவூரார்
                4. நம்பியாண்டார் நம்பி
                5. வேணாண்டியடிகள்
                6. திருவாலிய முதன் புருசத்தனர் .
                7. சேதிராயன்
                8. கண்டராதித்தர்

   10ம் திருமுறை  => 
       *  திருமூலரால் பாடப்பட்டது
       *   5ம் நூற்றாண்டு
       *   பாடல்கள் : திருவிசைப்பா & திருப்பல்லாண்டு
       *   3000 பாடல்கள் ( 3000 ஆண்டுகள் பாடப்பட்டது )
       *   " சித்தாந்தத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்
       *   சித்தர் பரம்பரையில் முதன்மையானவர் .
       *   சித்தாந்தம் எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

   11 ம் திருமுறை  => 
        *  12 பேரால் பாடப்பட்டது
        *  பாடல்கள் : திருவிரட்டை மணிமாலை
                                 அற்புத திருவந்தாதி
                            திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
                            மும்மணிக்கோவை
                            திருவெழுக்கூற்றிருக்கை
                                   காரெட்டு
                              திருவலஞ்சுழி                                                                   

       * இயற்றியவர்கள் :
            1. திருவாலவாயுடையர்
            2. காரைக்கால் அம்மையார்
            3. ஐயடிகள் காடவர் கோன் நாயனார்
            4. சேரமான் பெருமான் நாயனார்
            5. நக்கீர தேவர்
            6. கலாட்ட தேவர்
            7. பரென தேவர்
            8. கபில தேவர்
            9.  இளம் பெருமானடிகள்
            10. பட்டினத்தார்
            11. அதிராவடிகள்
            12.  நம்பியாண்டார் நம்பி


  12 ம் திருமுறை  =>  
          *   பெரிய புராணம்
          *   இயற்றியவர் : சேக்கிழார்
          *  2ம் குலோத்துங்கனின் அவைப்புலவர்
         *    திருத்தொண்டர் புராணம் & பெருங்காப்பியம் என அழைக்கப்படுகிறத்து
         *   சுந்தரரின் திருத்தொண்ட தொகையையும் , நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்ட திருவந்தாதியையும் இணைத்து எழுதப்பட்டது
         *    சேக்கிழார்
         *   தொடக்கவரி " உலகெல்லாம் உணர்ந்து ஓதுவதற்கு அறியான் ..."      
                                                                   


  4000 திவ்ய பிரபந்தங்கள் :-





   *  வைணவ மதம் வளர உறுதுணையாக இருந்தது
   *  தொகுத்தவர் நாதமுனிகள்
   *  காலம் கி .பி . 5 to 8 
   * பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டது


  1. பொய்கை ஆழ்வார்   ==========>   முதல் திருவந்தாதி  -100
  2.  பூதத்தாழ்வார்  ===============>   இரண்டாம் திருவந்தாதி - 100
  3. பெரியாழ்வார்  ===============>    மூன்றாம் திருவந்தாதி -100
  4. திருமழிசை ஆழ்வார் =========>    திருச்சந்தவிருத்தம் - 150
                                                                                        நான்முக திருவந்தாதி - 96
  5.  நம்மாழ்வார்==================>   திருவாசிரியம் - 7
                                                                                          திருவாய்மொழி - 1102
                                                                                          திருவிருத்தம் - 100
                                                                                          பெரிய திருவந்தாதி - 87

  6. மதுரகவி ஆழ்வார்  ============>  கண்ணிநுண் சிறு தாம்பு -11
  7. குலசேகர ஆழ்வார் ============>   பெருமாள் திருமொழி -55
  8. பெரியாழ்வார் =================>  பெரியாழ்வார் திருமொழி -151
                                                                                             திருப்பல்லாண்டு -12
  9. ஆண்டாள் ====================>    திருப்பாவை( வேத வித்து ) - 30
                                                                                             நாச்சியார் திருமொழி - 143

  10. தொண்டரடிபொடி ஆழ்வார்  ===>   திருமால் திருப்பள்ளியெழுச்சி -55
  11. திருப்பாணாழ்வார் =============>    அமலனாதிபிரான் - 10
  12.  திருமங்கை ஆழ்வார்  ==========>  பெரிய திருமடல் -40
                                                                                     சிறிய திருமடல் - 78
                                                                                    பெரிய திருமொழி - 1084
                                                                                 திருவெழு கூற்றிருக்கை - 1
                                                                                   சிறு குறுந்தாண்டகம் - 20
                                                                                                 சிறு பெறுந்தாண்டகம் -30





               ==============================================================================